பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவும் இருந்து வி ட் டா ல் போதுமா? எச்செயலுக்கும் காத்தாவான ஆண்டவன் அருள் வேண்டாமா ?

நிச்சயம் வேண்டும். அதுவும் சன்மார்க்க வழியில், அகிம்சா மார்க்கத்தில் அந்த அருளைப் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தினை இந்நூலின் கடைசி பதினைந்து வரிகளில் கூறும் திரு.வி.கவின் திறன்தான் என்ன?

கிறிஸ்துவின் அருள் வேட்டல்

பிறவியில் துன்பத்தைக் கடக்க வேண்டும். துன்பத்தைக் கடப்பதே எல்லா ச ம ய ங் க ளி ன் குறிக்கோள். இதை முக்தி என்கிறார்கள். ஏதேதோ பெயர் சொல் கிறார்கள். ஆனால் முக்தியை எப்படி அடைவது? காட்டிற்கு ஒடி தவம் செய்தால் முக்தி கிடைக்குமா? கிடைக்காது, கிடைக்காது!!!

பெண்களை மாயை என்று தூற்றி, துறந்து இயற்கைக்கு மாறாக வாழ நினைத்தால், முக்தி ஓடி வருமா? வராது, வராது, வரவே வராது!!

பின்னே கிட்டாத ஒன்றைப் பற்றி சிந்திப்பானேன்? முக்தியைப் பற்றி மறந்து மூர்க்க விலங்கின வாழ்க்கையில் ஈடுபட்டால் என்ன தவறு? தவறு: மிகத் தவறு! ஏன்?

உய்ய வழியா இல்லை? சரியான உய்யும் வழி தெரிந்துக் கொள்ள முயலாமல் இருப்பது யாருடைய அறிவினம்?

அருள் நெறி போதித்தவர் எத்தனை பேர் இல்லை? சன்மார்க்கம் போதித்த இராமலிங்கரை சிந்திக்கத் தவறினால், அது யாருடைய தவறு: ‘அன்பே சிவம்’ என்ற திருமூலரையும் அறிவே கடவுள்’ என்ற தாயுமானாரையும் மறப்பது சரியோ? இவர்களை மறந்தாலும், “பகைவனுக்கும் கருணை வேண்டி, அவர்தம் தவற்றை மன்னித்த ஏசுவை மறப்பது சுலபமா?

23.2