பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உறுதி உனக்கு பரமபிதாவாகிய கடவுளிடத்து இருந்தால் கவலைப்பட மாட்டாய்.

ஏன் தெரியுமா? அப்பனின் அருள். அது எத்தகையது தெரியுமா?

‘கேளும் கொடை வரும். தேடுமே கண்டடைவீர்

தாளகலும் தட்டுமே சார்ந்து.’

அப்படியா? அது எங்ஙனம்?

அப்பனோ அன்பு, நலம் ஆக்கவே ஆர்த்தருள்வன் இப்புவியில் வேண்டுநருக் கென்று*

கிறிஸ்து பெருமானின் தத்துவத்தை எவ்வளவு அழகாக சாறாக பிழிந்து கொடுத்து விட்டார் இராயப்பேட்டை முனிவர்.

இருளில் ஒளி

பார்வை இழந்து இருள் சூழ்ந்தபோது, ஒளி பிறந்தது. புறக்கண் மங்கியது. ஆனால் அறிவுக்கண் மேன்மேலும் ஒளி பெற்றது. தெளிந்த ஒடையாக அறிவு செயல்பட, திரு.வி.க ‘இருளில் ஒளி நூலை வெளியிட்டார்.

இது நேரம், நம்மை அறியாது மில்டன் என்ற பெரும் ஆங்கில கவிஞனை நினைக்கிறோம். அவருக்குக் கண்பார்வை போனபோது தான் உலகே வியக்கும் ‘இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற உயரிய காவியம் பிறந்தது.

இருளில் ஒளி நூலில் கடவுளியல், உலகியல், வாழ்க்கைக் கூறுகள்- அவைகளின் உட்பிரிவுகளான பல்வேறு அறங்கள்பொதுமை, புதுமை, புரட்சிகள், காந்தியடிகளின் அசம் சை முன் குறிப்பிட்ட நூல், ‘அப்பன் அருள்’, 133,

பக். 25.

* *  R. y so a 2 * * 137, பக். 25.

234