பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலையின் கதவடைப்பு: தொடர்ந்து பக்கிங்காம் ஆலையில் இதன் எதிரொலி! சூளை ஆலை மூடப்பட்டது. சுமார் பதினாயிரம் தொழிலாளருக்குத் தொல்லை என்றால் தொழிலாளர் தலைவர் திரு. வி. கவைப் பாதிக்காமல் இருக்குமா? இல்லை, வாளாகத்தானிருக்க விடுமா?

தொல்லைகளினூடே தொல்லைகளின் மூலகாரணத்தை ஆராயத் தூண்டின பிரச்னைகள். காரணம் தெளிவாகியது. காரணம் யாது? வள்ளுவர் கூறிய அறம் மங்கியது; மறந்து போனது; விட்டே அகன்றது. அறம் இருந்திருக்குமேல், தொல்லைகளுக்கு இடமேது? கிடையாது. கிடையாது. கிடையவே கிடையாது!

போராட்டத்திலே

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. போராடவே பிறந்தவர். போராட்டத்திலே தான் அவருக்கு வளர்ச்சி. போராட்டத் திலே எழும் அமைதிக் குறைவிலே பிறக்கும் அரிய நூல்கள்; சிந்தனை பிறக்கும்; உருப்பெறும்; அரிய சிறந்த வரிவடி வைப் பெறும்; நிலைக்கும். இடவசதி இன்றேல் மிக நன்று; அறவே வசதிகள் இன்றேல் மிக மிக நன்று. மிக, மிக அரிய நூல்கள் உருவாகி, வெளிவரும்,

‘இடுக்கண் வருங்கால் ககுக: அதனை அடுத்துார்வது அஃதொப்ப தில்

என்ற குறட்பாவுக்கு திரு.வி.கவைவிட ஒரு சிறந்த எடுத்துக் காட்டும் உண்டோ?

அலைபாயும் மனத்திற்கு அருமருந்து

தொல்லை மிக்க சூழ்நிலையில் அலைபாயும் மனத்திற்கு அருமருந்தாக அமைந்தது திருக்குறள். இதே மருந்து அனை வருக்கும் பயன்பட வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் திருக்குறள் விரிவுரையாக வெளிவந்தது.

1 I