பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைந்தவர் சிலர். அவருள் குறிக்கத் தக்கவர் கார்ல் மார்க்ஸ்.

கார்ல் மார்க்ஸ் (1818-1883) வாழ்க்கை வரலாற்றை விரிவாக தமது ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி’ நூலில் கூறுகிறார் திரு. வி. க. அறிஞர் ஹெகலிடம் தத்துவம் பயின்றவர் இந்த ஜெர்மானியர். கருத்து வேற் துமை விளைந்தது கார்ல் மார்க்ளக்கு தனி நபர் பொரு ளுடைமையில் வெறுப்பும் சேர்க்கையில் சேர்க்கைத் தொழில் முறையில் விருப்பும் உண்டாயின. அக்கால ஜெர்மனிக்கு இக்கொள்கை பிடிக்கவில்லை. விளைவு?

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியிலிருந்து துரத்தப் பட்டார். கார்ல் மார்க்ஸ் என்ன செய்தார்? தமக்கு தொல்லை வருகிறதே என்று கொள்கையை விட்டுக் கொடுத்தாரா? இல்லை; இல்லை. தமது கொள்கையில் உறுதியாக நின்றார். ஜெர்மனியில் இருக்க முடியாது பெல்ஜியத்தை நோக்கினார். பெல்ஜியம் அவரை ஏற்றதா? இல்லை. பிரான்ஸுக்கு ஓடினார். எந்த குடியரசு நாடும் அவருக்கு இடந்தரவில்லை. ஏழை மார்க்ளின் நெஞ்சம் சுழன்றது. கருத்து வேற்றுமையை மதிக்கும் இங்கிலாந்தை அணுகினார். இங்கிலாந்து அவருக்கும் இடம் கொடுத்தது. இங்கிலாந்து இடங்கொடாமல் அவரை அலைய வைத்திருந்தால், உலகை ஒருமைப்படுத்த வல்ல ‘காபிடல்’ போன்ற சீரிய நூல்கள் வெளி வந்திருக்குமோ?

“மார்க்ஸின் உள்ளத்தில் பழைய உலகின் சிறுமைகள் புகுந்தன; அவ்வுலகின் அலைவும் குலைவும் தொடர்ந்து நுழைந்தன. உலகைப் புதுப்பிக்க அவர் உள்ளம் கிளர்ந்து எழுந்து, எழுந்து புதிய உலகைப் படைத்தது.”*

அது நூல்களாகவும், இயக்கமாகவும் உருக் கொண்டது.

மார்க்ளிலம் என்றால் என்ன?

  • ‘பரம்பொருள்’, பக். 80.

2.38