பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏகாதிபத்தியக் கொடுமையால் உலகம் பசி.பட்டினிநோய்-அகால மரணம்-அடக்கு முறை-உரிமைக் கேடு, போர் முதலியவற்றால் அரிக்கப்படுவது கார்ல் மார்க்ஸின் நெஞ்சைப் பிளந்தது; புது உலகைப் படைக்கக் கடவியது. அவரது கல்வியும், கேள்வியும், அறிவும், அன்பும், ஆராய்ச்சி யும் அனுபவமும்-முதல், தொழில் அற்ற ஓர் உலகை வறுமை கொடுமை செல்வத் திமிர் அற்ற ஓர் உலகை போலீஸ்-பட்டாளம் அற்ற ஓர் உலகை அரசு அற்ற ஓர் உலகை, உற்பத்தி சாலை போர்க் கருவிகளை வடியாததைக் காணும் ஒர் உலகை சாதி, மத, நிற, நாடு முதலிய வேற்றுமைகள் நெளியாத ஒர் உலகை, தனிமை அதாவது தன்னலம் அற எல்லோரும் சேர்ந்து தொழில் புரிந்து வாழும் ஒர் உலகை-இவையெலாஞ் சேர்ந்த ஒரு புது உலகைப் படைக்க நெருக்கின. அந்நெருக்கு மார்க்ளியமாய் ஒரு புது உலகைப் படைத்தது.”*

முக்கூறு

‘மார்க்ஸியம் பொதுவாக சமதர்மம் என்றும், பொது உடைமை என்றும் பேசப்படுகிறது. இது பருமைப் பேச்சு. மார்க்ளியத்தின் நுண்மையில் நுழைந்து பார்த்தல் வேண்டும். பார்த்தால் மார்க்ஸ் பொதுமையில் முக்கூறு இருத்தல் இனிது விளங்கும். முதற்கூறு-சோஷலிஸ்ம், இரண்டாவது-கம்யூனிஸம்: மூன்றாவது-பெர்பெக்ட் (Perfect) கம்யூனிஸம் அதாவது முழு கம்யூனிஸம். இதை சுத்த கம்யூனிஸம் என்று சொல்லலாம்.”*

தமது மற்றொரு நூலாகிய வாழ்க்கை வழியில்’ மார்க்ஸியம் பற்றி விரிவாகக் கூறியுள்ள திரு. வி. க மார்க்ஸியத்தையும், காந்தியத்தையும் ஒப்பிடுகிறார்

  • பக். 81-பரம்பொருள். * முன் குறிப்பிட்ட நூல், பக். 82.

23.9