பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளுடைமையும் “அருளுடைமையும் என்ற செய்யுள் நூலில், இந்தியாவுக்கு எது உகந்தது என்றறிய அதைப் பார்க்கலாம்.

பொருளும், அருளும் அல்லது மார்க்ஸியமும், காந்தியமும்

மார்க்ஸியம் என்பதற்கு ஒரே ஒரு சொல்லில் விளக்சம் கூற திரு.வி.க வினால் தான் முடியும். அதாவது அது பொருள் உடைமை. இந்த தத்துவம் புதியதா என்றால் இல்லை. எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவில் பழக்கத்திலிருந்து, பின் நடுவே மறைந்து, மீண்டும் ஒளி வீசும் எல்லோருடனும் பகிர்ந்தல் கொள்கையைப் பின் பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரப்பட்ட ஒரு பொருளாதார தத்துவம்.

அதாவது அதிகப்படியாக, தேவைக்கு அதிகமாக ஒரு சில பொருள் குவிந்து மற்ற இடங்களில் வறுமை தாண்டவ மாடுமானால் என்ன நிகழும்? வறுமை பொறுமை இழக்கும். எரிமலையாக வெடிக்கும்; எத்தகைய எரிமலை? புரட்சி எரிமலை, இந்த எரிமலை வெடித்து ஒரிரு பகுதிகளிலுள்ள பொருளை எடுத்து வலுக்கட்டாயமாக இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும். இதை தற்கால நாகரீகத்திற்கு ஏற்றாற்போல பொதுவுடைமை’ என விரிவாக விளக்கிக் கூறுவதே மார்க்ஸியம்,

இந்த புரட்சி தவிர வேறு வழியில் பகிர்ந்தளிக்க’ முடியாதா என்ற ஐயம் நமக்குத் தோன்றுகிறது. முடியும்.

பண்டைய இந்தியாவில் இந்த பகிர்ந்த ண்ணல்” பழக்கத்தில் இருந்தது. இதை நாயன்மார் வரலாற்றில் காண்கிறோம். பொதுவுடைமை என்ற சொல், வழக்கில் இல்லாவிட்டாலும் வாழ்க்கை முறையில் இருந்தது. ‘விருந்தோம்பல்’ என்ற வள்ளுவரின் அதிகாரம் இதற்குச் சான்று கூறும்.

240