பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியமும் பொதுவுடைமையைத் தன் அடித்தளமாகக் கொண்டதே. என்றாலும் வெறும் பொருள் இன்பம்தராது: அமைதி நல்காது என்பது அனுபவம் அறிந்ததொருஉண்மை. எனவே அதற்கு இன்னும் தேவையானது என்ன? அருள்.

‘அருளுடையார் எல்லாம் உடையர்’ - அருள் என்பது இந்த இடத்தில் எல்லா உயிர்களிடத்தும் அருள் பூண்டொழுகுவது. அதாவது அகிம்சை வழி வாழ்வது.

மார்க்ஸியம்-ஹிம்சை வழி காட்டி அச்சுறுத்துகிறது. இந்த அச்சுறுத்தல் எப்போது நிகழும்? மக்கள் இயற்கை வழிக்கு மாறாக வாழ்ந்தால் அப்போது நிகழும். எனவே காந்தி அடிகள் கூறுவது சுலபமாகப் பின்பற்றக் கூடிய வாழ்க்கை வழி,

இதைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் பயங்கர விளைவைக் கூறுவது மார்க்ஸியம். ஆக இரண்டும் ஒன்றே. காந்தீயம் அருள்வழி, மார்க்ஸியம் பொருள் வழி.

இதைக் கூறும் ஒர் எடுத்துக் காட்டு:

‘ஓரறி வுயிரே ஈரறி வுயிராய்

ஈரறி வுயிரே மூவறி வுயிராய்

மூவறி வுயிரே காலறி வுயிராய் காலறி வுயிரே ஐயறி வுயிராய் வளர்தலை முன்னோர் அளந்தளக் துரைத்தனர்; மாவும் மாக்களும் ஐயறிவினனே ஆறாம் அறிவுக் கூறே மனிதன் ஐந்தில் கிடக்கும் விந்தை என்றோ! கொலைபுலை தவிர்த்தால் குலவும் ஆறே: ஆறாம் அறிவுப் பேறு, புவியை அகிம்சையில் வளர்க்கும் மகிமை உடையது.”*

  • பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும், காந்திய

மும், பக். 35-36.

24 1