பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரந்த மனம் கொண்டவர். இறுதிவரை சன்மார்க்கமே. ‘உலகம் உய்ய வழி சன்மார்க்கமே என பட்டி தொட்டி தோறும் முழங்கி, தாமே அம்மரபில் வாழ்ந்து காட்ட திரு.வி.க தவிர வேறு யாரால் முடியும்.

சன்மார்க்கப் பொதுவுடைமையே உலக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி உய்விக்கச் செய்யும், என்ற உண்மைக் கண்டவர் தமிழ் முனிவர். அதைப் பற்றி ஒய்வின்றி எல்லாவிடங்களிலும் பேசியவர். அவர் பெயர் சன்மார்க்கப் பொதுவுடைமை பெரியார் வரிசையில் நிச்சயம் என்றென்றும் விளங்கும்.

திரு.வி.க ஒர் உலகன்; நடமாடும் தமிழ்க் கலைக்கூடம். நம்மிடையே அவர் அமரராக வாழ்கிறார். நம் உள்ளத்தில் வாழ்கிறார். தமிழனும் தமிழ்நாடும் உள்ளவரை அவரை நிச்சயம் மறக்காது உலகம். கொள்கை வீரர்; பயன் கருதா தியாகி; தேசத் தொண்டில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தொழிலாளர், தமக்கு உயிர் கொடுத்த பெருந்தகை திரு.வி.கவை மறப்பாரோ? மாட்டார், மாட்டார்!

அவரது கொள்கை வாழையடி வாழையாக வாழ்ந்து வரும்.

வாழ்க திரு. வி. க. வளர்க தமிழ்!

-டு