பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பால்

அறம் பொருள் இன்பம் மூன்றும் முப்பால். அறவழி பொருளிட்டி இன்பம் துகர்ந்தால், வீடு பேறு தானே கிட்டும் வீடு தனித்திருக்கக் கூடியது அல்ல. முப்பாலை சார்ந்ததே. வீட்டை மறைப்பது கட்டு, காமம், வெகுளி, அழுக்காறு, மயக்கம், இவையே கட்டு, இக்கட்டுகளை கட்டுப்படுத்தி, கட்டுக்குள் அடக்கி, ஒடுக்கி அறுத்தெறித்தால், மனம் மாசிலாததாகும். மனம் மாசிலாதாகும்போது அப்பர் கூறிய ‘எந்நாளும் இன்பமே என்ற நிலை ஏற்படும். இந்நிலை ஏற்பட்டால் ஏசுபெருமான் கூறிய பரலோக இராச்சியத்தை நம் உள்ளத்தே காணலாம்.

செவ்விய வாழ்வு!

செவ்விய வாழ்வு, இயற்கையோடு இசைந்த வாழ்வு. இயற்கை வாழ்வு நல்வழியிலே வாழ்ந்து, கல்வி பயின்று, நேர்மையான வழியில் தொழில் புரிந்து, பொருளீட்டி, இன்பம் சீரிய வழியில் வாழ்தலே, துறவறம் செவ்விய வாழ்வு ஆகாது; காழ்ப்பும் ஆகாது; மற்றவை எல்லாம் அறமற்ற வாழ்வே! பாயிரம்-விளக்கம்

பாயிரம் என்ற சொல்லுக்கு விரிந்த பொருளுண்டு. அவற்றுள் ஒன்று, நூன்முகம் என்பது. நூலின் முகமே பாயிரம், உடலுக்கு தலையாய அங்கம் முகம். அதே போன்று நூலின் சிறப்பான உறுப்பு பாயிரம்.

பாயிரத்திலுள்ள நான்கு அதிகாரங்கள் முறையே கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியன.

அதிகார அமைப்பின் சிறப்பு

பொருள் இன்பத்துக்கும் அறத்துக்கும் இன்றியமை யாதது. ஆனால் பொருள் ஒன்றே இன்பமோ அறமோ

I 2