பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் கடவுளிடம் அடங்கும்.

‘‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறம்’

கடவுள்

எல்லாவற்றையும் கடந்து நிற்பான்; எல்லாவற்றிலும் கலந்தும் இருப்பான்; எல்லாவுயிரையும் செலுத்துவான்; இயக்குவான். இவனே கடவுள், இந்த மூன்று குணங் களையும் கொண்டே கடவுள் ஒன்றே. ஆனால் பல பேர் கொண்டது: பேர் அற்றதும்கூட, ‘கடவுளை அது என்றும் அவள் என்றும் அவன் என்றும் சொல்வது உலக வழக்கு. ஊர் பேரில்லா ஒன்றை எப்படி சொன்னாலென்ன?’’’

மூன்று தன்மையுடைய கடவுளின் எத்தன்மை வழி பாட்டிற்குரியது? எல்லாவற்றிலும் நீக்கமற கலந்து நிற்கும் தன்மையே வழிபாட்டுக்கு உரியது.

இறைவன் நுட்பத்தை அறிவது எங்ஙனம்?

இயற்கை வழிபாட்டாலே சிலருக்கு விளங்கும். மற்றை யோருக்கு குருவின் அருள் தேவை.

குருவுக்குரிய ஆற்றல்கள் யாவை?

பன்மையில் ஒருமை காணும் பேராற்றல் பெற்றிருத்தல் வேண்டும், தாம் அறிந்த இந்த உண்மையை விளக்கிக் கூறும் சிறப்பாற்றல் பெற்றிருப்பவரே குருவாகத் தகுதியுள்ளவர்.

‘கடவுள் வாழ்த்து’ என்றுளதேன்? முதற்பாட்டில் கடவுள் உண்மையும் மற்ற பாக்களில் வாழ்த்தும் சொல்லப் பட்டிருப்பதை ஆராய்ந்தால் கடவுள் வாழ்த்து’ என்பதன் நுட்பம் புலனாகும். கடவுளுக்கு உள்ள அனைத்துக் குணங் களையும் கடவுள் வாழ்த்து தெளிவாக்குகிறது.

  • திருக்குறள்-பாயிரம்- திரு .வி. க விரிவுரை’

பக், 34,

14