பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவங்கள் இரு விதம். ஒன்று ஒலி வடிவம்; இது செவி மட்டுமே உணர்வது.மற்றது வரி வடிவம்-இது கண்ணுக்குப் புலனாவது ஒலி வடிவிற்கும் வரிவடிவிற்கும் வேற்றுமை உண்டு. என்றாலும் ஒலி வடிவமே வரிவடிவத்தின் பிறப்பு பிடம். இதுவே நாதம்; இது சீரான ஒலி. காரண ஒலி. இது அகத்திசையொலி எனப்படும். இதுவே ஒலிகளின் மூலம்.

காரிய ஒலி மாறானது. அது புறத்திசை ஒலி எனப் படும்.*

நாதம் அகரம் என்றும், ஆதி அகரம் என்றும் கூறப் பட்டது. எல்லா எழுத்துக்களின் தாயகம் ஆதி அகரம் ஆதி அகரம் தனித்தும் நிற்கும், அகர ஒசையாகவும் இருக்கும், மற்ற எழுத்துக்களெல்லாமாகி அவற்றையும் இயக்கும் பண்புடையது.

இதையே குழலூதும் கண்ணன்நானே எழுத்துக்களின் அகரமாகின்றேன்’** என்றான்.

அகரத்துடன் மற்றவை ஒன்றும் போதும். அகரம் மட்டும் ஆதியாவதன்றி, பிற எழுத்துக்களுக்கும் முதல் ஆவதால் ஆதி அகரம் நிலையாக உள்ளது. ஒன்றுவது அகம், ஒன்றியது புறம். இரண்டும் பின்னே ஒன்றாகும்.

ஒருவன் குருவை அண்டி பயிற்சி பெற்றால் பொறிகளை அடக்க அறிவான், பொறிகளை அடக்க, அடக்க, உணர்வு தோன்றும்; ஒலியுண்டாகும் அடுத்து மீண்டும் ஒலியுண் டாகும்; மீண்டும் மீண்டும் உண்டாகும். அதுவே தாயொலி அல்லது நாதம் அல்லது ஆதி அகரம்.

இந்த ஆதி அகரம் எல்லா உயிர்களிடையும் உள்ள உட்கரு. ஓங்காரத்தின் முதல் ஒலியே அகரம். ஓங்காரமே

  • தொல்காப்பியம்-எழுத்து-ஆகம உ * மெய்க்கண்டார்

‘அக்கரங்களின்றாம் அகவுயிர்ன்றேல்’, பக், 29.

I 6