பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம் ஞாயிறாக விளங்குபவன். எனவே ஞாயிறு வழிபாடு, இஃதொரு இயற்கை வழிபாடே!

தனித்திருக்கும் இறைவன், தானே ஞானகுருவாகி உள்ளொளியை ஏற்படுத்தி, அறியாமை இருளைப் போக்குகிறான்.

இம்மூன்று நிலைகளும் எல்லா சமயத்திற்கும் பொதுவானவையே.

எனவே இந்த முதற்பாட்டு விதை; பாயிரம் முளை: அறம், பொருள் இன்பம் இம்மூன்றும் முப்பால் கவடுகள்.

இந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறட்பாக்கள் என்ன கூறுகின்றன என்று பருந்துப் பார்வையாகப் பார்ப்போமா?

உலகம் முழு முதற்கடவுளை முதலாக உடையது.

2. கடவுளின் இயற்கை

இயற்கை இறையை விரும்பினால் இருவினையுஞ் சென்றடையா.

3. கடவுளே குரு

குருநாதன் வாயிலாகக் கடவுள் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்ட காலம் வாழ்வர்.

4. திருவடி போற்றல்

குருநாதன் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளியுள்ள

இறைவனது திருவடியை அடைந்தவர் நீண்ட காலம்

வாழ்வர்.

5. கற்றதனால் ஆன பயன்

கற்றதனாலாகிய பயன் இறைவனை வணங்குவது.

I 9