பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்பாக்கள் கூறுகின்றன. பத்தாவது குறள் மழை செய்வ தெல்லாம் ஒன்று சேர்த்துக் கூறுவன.

மழையின் சிறப்பு

முதல் குறள் உலகுக்கு மழை எத்தகைய அமுதம் என்று கூறுகிறது. அடுத்து இரு குறள்கள் இக்கருத்தை மேலும் விரிவு படுத்துகின்றன. பிறர் துகரும் பொருட்களை உண்டாக்குவது மழை. அதே சமயம் தானே நுகர் பொரு ளாகவும் ஆகும் தனிச்சிறப்பு மழைக்கே உரித்து.

மழை பொய்த்தால் விளையக் கூடிய விபரீத விளைவு களை இரண்டே வரிகளில் படம் பிடித்துக் காட்டுகிறார் வள்ளுவ பெருமான்.

நான்காவது குறளை மட்டும் ஆராயலாமா? விசும்பின் துளி வீழின அல்லால் மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது இக்குறளின் கருத்து பாது? மழைத்துளி விழுந்தாலன்றி புல்லுந் தலைக் காட்டாது.

இதே கருத்தை மணக்குடவரும் கூறுகிறார்: ‘வானின்று துளி விழி னல்லது அவ்விடத்து பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது’ இக்குறளை உற்று நோக்கினால் இக்குறட்பாவில் கையாளப்பட்ட சில சொற்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். வள்ளுவர் ‘விசும்பின் துளி என்கிறார். ஏன்?

விசும்பின் துளி

இதற்கு என்ன விளக்கம் தருகிறார் திரு. வி. க. என்று பார்ப்போமே?

‘விசும்பின் துளி என்னும்போது அது வானத்திலிருந்து விழும் மழைத்துளி என்று பொருள் தரும். இது என்ன

2 3