பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே புல், பூண்டு செழிக்க மழைத்துளியே தேவை. தாவர வர்க்கம் செழித்தால் உயிர்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படாது. எனவே மழைத்துளி என்றார்.

புல் வேண்டின்!

ஒரு வேளை மழை இன்றேல், (மற்று ஆங்கே) பசும் புற்றலை காண்பதரிது,

வெறும் புல் கூட தலை காட்டாது. எப்போது? ஒரு வேளை மழை இல்லாவிடில்! இது கூறும்போது நம் மனக்கண் முன் படம் ஒடுகிறது. எத்தகைய படம்?

மழைத்துளி விழுகிறது. முதன்முதல் புல் துளிர்க்கிறது. விழும் மழையின் தன்மைக்கேற்ப அமைகிறது, பசும்புல். மழைத்துளி சிறியது; முதன்முதல் வரும் தாவரமும் சிறிது. அதுவே பசும்புல்.

பயிர் செழிக்க...

பின்? மழை பெய்யப் பயிர் செழிக்கும். பயிர் செழித்தால் பசியை அது போக்கும். உயிர்களுக்கு நல் வாழ்வு நல்கும். இதை நல்க மூல காரணம் மழைத்துளியே. இது மிகையன்று. அத்துடனா? நிலத்தின் வெம்மையைத் தணிக்கும்.

பசும்புல் அடுத்தடுத்து வரும் மழையின் அறிகுறி. எனவே உயிர்கள் மகிழும்படி பசும்புல் நம்பிக்கையைக் கொடுக்கும். என்னே மழைத் துளியின் மாண்பு! துளி, தூறலாகி, பெரு மழையாகி விடா மழையாகவும் பொழியும். தாவரங்கள் துளிர் விடும்; செழிக்கும்; நிலம் பச்சைப் போர்வை போர்த்துக் கொண்டு, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தரும்; வளம் கொழிக்கும்; பொன் விளையும்.

மழை வீழாதாயின்?

மேலே சொன்ன எல்லாமே அரிது, அரிது, மிக அரிது.

24