பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவர வளமும் உயிர் வளமும்

தாவர வளமே உயிர் வளம், இரண்டும் ஒன்றின் மேலொன்று ச ார் ந் த ைவ. தனித்து இரண்டும் இயங்குதலரிது. தாவரம் வெறும் நிலச்சத்து கொண்டும், ஞாயிற்றின் ஒளிச் சத்து கொண்டும் வளருமா? வளராது, வளராது! ஏன்?

அதற்கு மழைத்துளி மிக மிக அவசியம், தாவரங் களுக்குச் செழிப்பைத் தரும் ஆற்றல் மழை ஒன்றிற்கே உண்டு. இதனைப் .ோற்றாமல் விடுவது சரியா?

மழையும் உழவும்

ஐந்தாவது குறள் உழவுக்கு மழை எவ்வளவு அவசிய மானது என்பதை வலியுறுத்தும்.

கடல் வளமும் மழைத் துளியும்

கடலாக்கத்திலுள்ள முதல் குறள், மழை பெய்யா விட்டால் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளைக் கூறும்.

மழை பெய்யாவிடில், நிலவளம் தவிர கடல் வளமும் குறையும். அது மட்டுமா?

ஒழுக்கம் என்னாகும்? கீழ்க் கண்ட குறளே இதற்கு விடை பகரும்.

‘நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு’ மழையால் உண்டாவது ஒழுக்கம். மழையில்லையேல் ஒழுக்கத்திற்கு சிறப்பான இடம் ஏது! அது குன்றும் என்று குறிப்பாக உணர்த்தப் படுகிறது.

இதைத் தவிர மழையால் வேறு நற்பயன்களுண்டா? உண்டு. தானமும் தவமும்.

25