பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் புரியும். நீத்தாருள் குருமார் நிலை எய்துவோரும் உளர்.

நீத்தாருக்குப் பெருமை தருவது அவர்களது எல்லை கடந்த நிலையே. கடவுளுக்குள்ள பெருமையெல்லாம் நீத்தாருக்கும் உண்டு. ஆகவேதான் வான் சிறப்பைத் தொடர்ந்து வருகிறது நீத்தார் பெருமை. நீத்தார் நெஞ்சே கடவுளின் கோவில்; நீத்தார் ஆண்டவனோடு வானில் ஒன்றறக் கலந்தவர். எனவே இவ்வதிகார அமைப்பு சாலப் பொருந்தும்.

அதிகார பொருள் வகை

இவ்வதிகாரத்துப் பொருளை மூவகை ஆகப் பிரிக்கலாம். முதல்பிரிவு, நீத்தார் பெருமையின் திறத்தைப் பற்றிக் கூறும்; இரண்டாவது ஐந்தழிக்கும் வழி அமைதல் சிறப்பு. அடுத்ததாக ஐந்தவிக்குந் தன்மைக்கு உள்ள அறிகுறி களையும் கூறுகிறார் வள்ளுவர்.

நீத்தார், ஐந்தவித்த தன்மை பெற்றதால் பெருமை பெற்றவர். ஐந்தவித்தவர் யார்? அவர்களை எப்படி அறிவது? அவர்கள் குணம், மொழி, செயல்கள் அவரது பெருமைக்குரிய தன்மையை எடுத்துக் காட்டும். அவர்கள் வெகுளிக்கு இரையாக மாட்டார். இவர்கள் குணக்குன்று, சிறப்பான இனிய சொற்களையே பேசுவர்; இவர்கள் மொழி தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். செயற்கரிய செயல் களை செய்வர் இத்தகையோர், இதுவே இவர்கள் செயல் சிறப்பு. செயற்கரிய சிறப்பாவது ‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல்.’

பொருளின் பாகுபாடுக்கேற்ப முதல் மூன்று பாக்கள் நீத்தார் பெருமையின் திறத்தை விளக்கும்; இடை மூன்று, ஐந்தவித்தல் தன்மையின் சிறப்பு, பெருமை ஆகியன பற்றிக் கூறும். இறுதி நான்கோ, ஐந்தவித்தலுக்குரிய புறச் சின்னங்களையும், அறிகுறிகளையும் காட்டும்.

27