பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தணரென்போர் அறவோர்

அந்தணர் நல்லருளுடையவர்; அதாவது அருளாளர் என்னும் பொருளுடையது. அறவோர் என்பவர் மனமாசு களான அழுக்காறு அவா வெகுளி ஆகியவற்றை அறுத்தவர்; அந்நிலை பெற்றவர்.

ஆகவே அந்தணரும் அருளாளர்; அறவோரும் அருளாளர்: ஆக இருவரும் ஒருவரே. எனவே,

‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றார்.

அஃறிணை, உயர்திணை, பெருமை, சிறுமை மற்றும் எவ்வித வேற்றுமையும் கருதாது செந்தண்மை பூண்டொழுகுவது அரிது, அரிது, செயற்கரிது. மனமாசு அற்றவரால் தான் எவ்வுயிருக்குஞ் செந்தண்மை பூண்டு ஒழுக இயலும். புலனடங்கி, மனம் ஒருமைப்பட்ட நிலையில் தான் மாசு முற்றும் அகலும்.

இவ்வாறு செந்தண்மை பூண்டு ஒழுகுவோரே அந்தணர். இது செயற்கரிய செயல். இதுவே அறவோரது செயலும் ஆகும்.

செயற்கரிய செயல் எவ்வுயிர்க்கும் செந்தண்டொழுகும் அந்தண்மை என்று விளக்குகிறார் திரு வி.க.

நான்காம் அதிகாரம் அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல் என்றால் அறத்தின் வலிமையை வற்புறுத்தல்.

இதனையே மனக் குடவர், ‘அறன் வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத்து என்பதனை அறிவித்தல்’ என்றார். அந்தணர் என்பது, அழகிய தட்பத்தை உடையார்

என-ஏது பெயராதலின் அஃது அருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து-பரிமேலழகர்.

3 I