பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பேறு

அற நினைவு தோன்றும் போதே அறம் செய்யத் தொடங்க வேண்டும்; அஃது அழியாத் துணையாகத் தொடர்ந்து வரும்.

இப்படி செய்தால் நன்மை உண்டோ?

உண்டு, நிச்சயம் உண்டு என்று உறுதியாகக் கூறுகிறார் தன் அடுத்த குறட்பாவில்.

“அறவினை, மரணத்தை உண்டாக்காத வாழ்நாளைக் கூட்டும். அத்துடனன்றி, அறத்தின் வழி வருவதே இன்பம், பிற, இன்பமாகா’ என்று வலியுறுத்துகிறார்.

அதுசரி ஒர் ஐயம். அறநெறி என்று சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஆராய வேண்டாமா? அல்லது ஆராயக் கூடாதா?

இந்த ஐயத்தை உடனே தீர்க்கிறார் வள்ளுவர். எங்ஙனம்? அறநெறி இத் தன்மையது என்று ஆராய வேண்டியதில்லை; கூறவும் வேண்டுவது இல்லை என்று தெளிவுபடக் கூறுகிறார்.

இப்பெரும் புலவரைப் படம் பிடித்துக் காட்டும் ‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழு மில’ குறள் பற்றி திரு. வி. கவின் சிந்தனை எப்படியுள்ள தென்று பார்ப்போமா?

முன் குறளில் அறவினை மரணத்தை உண்டாக்காத வாழ்நாளைக் கூட்டும் என்றார்.

அதில் அது வாழ்நாள் அடைக்கும் கல்’ என்று ஐயம் திரிபறக் கூறுகிறார். அதே சமயம் அதுவே இன்பம் என்றும் தெளிவு படுத்துகிறார். இவ்வின்பம் எத்தகைத்து? அறத்தால் ஈட்டப்பட்ட பொருளும் அறவழியே வந்தது.

35