பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற இன்பம் பற்றி அகப்பொருள் நூல்கள் கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன) ஏழு திணைகளைக் கூறும்.

இவற்றில் ஒரு தலைக் காமமான கைக்கிளையும், பொருந்தாக் காமமான பெருந்திணையும், அறவழியில் வரும் இன்பம் அல்ல. மற்ற ஐந்திணையும் அறவழியின. இவை அன்போடு புணர்தலால், அறவழி சேர்ந்தவை. அறத்தின் கூறுகளில் அன்பும் ஒன்று. அன்பில் பிறப்பதே இன்பம்; அறத்தின் விளைவு அன்பு: அன்பின் பயனும் இன்பமே. எனவே அறத்தால் வரும் இன்பம் என்று வலியுறுத்தினார்.

காதல் இன்பமும் அறத்தாலேயே வர வேண்டும். அவ்வாறு இன்றேல் மற்றவை எல்லாம் துன்பமே.

“மற்றெல்லாம் புறத்த புகழுமில’

இன்டம் நுகர அறமற்ற தவறான பாதைகளில் செல்வதை ஏற்கவில்லை என்பதையே “மற்றெல்லா என்பது சுட்டிக் காட்டும்.

‘புறத்த’ என்ற சொல்லோவெனில் பாவத்தால் வரும் பிறனில் விழைவு முதலியன, அக்கணத்துள் இன்பமாய் தோன்றுமாயினும், பின் பெருந் தாங்கொனா துன்பத்தை விளைவிக்கும் என்பதை அறிவுறுத்தும்.

இது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பொருத்தமுள்ளதே.

‘ஒருத்தி-ஒருவன்’ இ ன் ப அறவொழுக்கத்தில் நிற்போரை உலகம் புகழும். மற்றையோரை ஏசும். எனவே அறவழி இன்பமே, இன்பம்: நிலையான இன்பம்.

அறவழியில் நின்று, வாழ்க்கை நடத்தியவர் வீடு பேற்றிற்கு தனி முயற்சி செய்ய வேண்டுவது இல்லை. விடுதலை தானே வரும். விடுதலை என்றால் என்ன? கட்டறுவது: மாசு நீங்குவது.

A 440-3 37