பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டறுந்ததும் எல்லாம் இன்பமாகவே விளங்கும். கட்டு அறவொழுக்கம் என்னும் இல்வாழ்க்கையில் அற்றுப் போகும்.

காதல் இன்பம் வெறும் ஆண் பெண் சேர்க்கை மட்டு மன்று, அது விடுதலைக்குரிய பிள்ளைப் பேறு, அன்பு, விருந் தோம்பல், ஒழுக்கம், ஒப்புரவு முதலிய பல அறக்கூறுகளைக் கொண்டது. ஒருமைக் காதல் மாசற்ற நிலை கூட்டு வதற்குத் துணை புரியும்.

திரு.வி.கவின் தெள்ளிய சிந்தனைக்கு இந்த குறள் விளக்கத்தை விட ஒன்று வேண்டுமா?

அறத்துப் பால்

பாயிர விரிவுரைக்குப் பின் அறத்துப் பாலில் முதலாறு அதிகாரங்களைக் கொண்ட இல்வாழ்க்கை இயலின் விரிவுரை எழுதினார். அறத்துப்பாலில் பொருட்பால், இன்பப் பால் அடங்கும்.

அறம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் எல்லாவற்றையும் ஒழிக்கும். மனத்துக்கண் மாசிலனாதல்’ இதுவும் அறத்தின் தன்மையே.

இவைகளைப் பெறுவது எங்ஙனம்? ‘இல்வாழ்க்கை’, வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு ஆகியன அன்பின் வழி இருப்பன. அன்பு விருந்தோம்ப உந்தும், விருந்தோம்பல் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண் டொழுகச் செய்யும். விருந்தோம்பலுக்கு மற்றொரு முக்கிய தேவை இன்சொல்.’

அறத்துப்பால் அறத்தை அறிவுறுத்தும் பகுதி. இல்வாழ்க்கை இயல்-இல்வாழ்க்கை படிப்படியே விளக்கிக்

கூறும் அதிகாரங்களைக் கொண்ட பகுதி.

இல்வாழ்க்கை இருவிதம். ஒன்று மனைவி மக்களிடை செலுத்தி வாழ்வது. மற்றொன்று இயற்கையிடம் அன்பு

38