பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறத்தில் இயற்கையான வாழ்வு நடத்தியே, தவம் செய்யலாம். இல்லறத்திலேயே துறவறம் மேற்கொள்ளலாம். இதற்கு எத்தனையோ பெரியோர்கள் வாழ்க்கை சான்று.

பின்னாளிலே அறம், இல்லறம் துறவறம் எனப் பிரிவுண்டது. இல்லறம் பழமையானது. “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்று இப்பாடல் கூறுதல் கருதற்பாலது.

பிறன் பழிப்ப தில்லாயின் நன்று:

அறமே இல்வாழ்க்கை, ஆகவே இல்லறத்தைத் துய்மை யாக நடத்துவது தலையாய கடமை. இல்லையெனில் அது போலி வாழ்க்கை. அஃதும் பிறன் பழிப்பதில்லாயினன்று’ இது பொருள் படவே அங்ஙனம் கூறினார்.

பிறன் யார்?

உலக வழக்கில் நாலு பேர்’ என்று சொல்கிறோம். இந்த நாலு பேர் யார்? அவர்களே மற்றவர். பிறன் என்றால் இங்கு நாலு பேரை குறிக்காது. ஒருவன் கூட என்பதையே குறிக்கும். அதாவது ஒருவன் கூட பழிக்க முடியாத, பழிக்க இயலாத, பழிக்க இடந் தராத ஒரு முன்மாதிரியான இல்லறம் நடத்த வேண்டும் என்பது புலவர் கருத்து.

பழிகள்

நேர்மையற்ற, அறமற்ற இல்லறம் பழிக்கு இலக்காகும். இந்தப் பழிகள் யாவை?

ஒருத்தி ஒருவனை விடுத்தாலோ ஒருவன் மணம்புரிந்த ஒருத்தியை விட்டு வாழ்ந்தாலோ அதனைப் பிறர் பழிப்பர். ஒருத்தி பல ஆடவருடனோ, ஒரு ஆடவன் பல மகளிரோடோ சேர்ந்து காம வெறிக்கு இரையானால், அது மிகப் பெரிய குற்றம். பொருள் முயற்சியின்றிச் சோம்பிக் கிடத்தலும்,

42