பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறான வழியில் பொருளிட்டலும், கஞ்சத்தனமும் பழிக்குரியனவே.

பேராசை, பிள்ளையை நல்வழியில் வளர்க்கத் தவறினாலோ, அதுவும் மிக மிகப் பெரிய பழி தரும். இத்துடன், ஒப்புரவும் இன்றி, விருந்தோம்பலும் இன்றேல் இது சாமான்யமான பழியே தராது.

எனவே இந்தப் பழி பயக்கும் ஒரு தவறு கூட இல்லாத இல்லறமாக அமைவதே சிறப்பு என்ற கருத்தைத் தெரி விக்கிறார் வள்ளுவர்.

இல்வாழ்க்கையின் வேர் அறம். இது பழிக்கு இடம்

தராது. பழிப்பு இல்லாத அறமுள்ள வாழ்க்கையே, சுவை யுள்ள வாழ்க்கை; மணமுள்ள வாழ்க்கை.

தனித்த செயற்கை வாழ்க்கை அறனெனப் படாது.

இதனை யடுத்து வரும் குறள் இல்வாழ்க்கையை விடுத்து வேறு வழியில் செல்வதால் ஒரு பயனும் கிட்டாது எனக் கூறுகிறது. நல்லதொரு இல்வாழ்க்கை, நோற்றலினும் வலிமையுடையது என்பதைக் காட்டுகிறது மூன்றாவது குறள் ,

நல்லதொரு இல்வாழ்க்கையின் பண்புக்கும் பயனுக்கும் தேவையானவை எவை என விளக்குகிறார் நாலாவது குறளில், அதாவது அன்பும் அறனும் தேவை என்கிறார்.

இல்வாழ்வான் கடமை

அடுத்து வரும் குறட்பாக்களில் இல்வாழ்வான் கடமை என்ன எனக் கூறுகிறார் ஆசிரியர்.

இல்வாழ்வான் பழிக்கு அஞ்சுவான்; பகிர்ந்து உண்பான். இத்தகைய வாழ்வில் குறை இருக்காது. அனைவருக்கும் நிலையான துணையாக நிற்பான். ஏன்? மூவருக்கும் நல்ல

43