பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையறத்துக்குத் தக்க மாண்பும், கொண்டவனது செல்வ அளவுக்கேற்ற வாழ்வை நடத்தும் தகுதி கொண்டவளே மனைவி.

ஒருவேளை மனைவியிடத்து நல்லியல்பு இல்லை யானால் என்னவாகும்?

இதனையே விளக்கும் அடுத்த குறள்:

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.”

மனைமாட்சி யாது?

மனையறத்துக்குரிய நல்லொழுக்கம், வரவுக்கேற்ற செலவு, தியாகம், அன்புடைமை, பிறர்க்கென வாழும் சிறப்பியல்பு; இன்சொல்லே பேசுவது; ஒப்புரவு, விருந்தோம்பல் முதலிய இயல்புகளே மனைமாட்சி எனப்படும். இவை மனைவியிடத்தே இல்லாமல் போகு மானால், அவள் இல்லாளே அல்ல! வாழ்க்கைத் துணையும் அல்ல. அவள் மாண்புடைய பெண்ணாக கருதப்படவே மாட்டாள். அத்தகைய ஒரு மனைவி வாய்த்தால்? வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில். மாண்பிலா பெண்ணை மணந்த ஒருவன் வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் பெருமையுடையது ஆகாது. சுருக்கமாக அது வாழ்க்கையே அல்ல. அவ்வாழ்க்கை எத்துணை நன்மையுடையதாயினும் ஒரு நன்மையும் இன்றாம் என்கிறார் மணக்குடவர்.

பரிமேலழகர் இதனையே ‘அவ்வில் வாழ்க்கை செல்வத்தால் எ த் து ைண மாட்சியுடையதாயினும் அஃதுடைத்தன்று’ என்று திட்டவட்டமாகக் கூறியிருக் கிறார்,

இதற்கடுத்த பாட்டும், மாண்பிலா மனைவியால் வரும் தொல்லைகளையேத் தொடர்ந்து கூறுகிறது.

46