பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைமாட்சி ஞாயிறு போன்றது. மற்றவை கோள்கள்; ஞாயிறு இல்லையேல் கோள்களுக்கு ஒளி ஏது? அதே போன்று மனைமாட்சி ஒன்றில்லையாயின், அதனால் விளையும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமே இல்லை.

செல்வங்கள் அனைத்தும் பெற்ற ஓர் இல்லம், இச்செல்வங்களில் ஏதுமில்லா மற்றொன்று; முந்தியதில் இல்லாள் மனைமாட்சி இல்லாதவள்; இரண்டாவதில் உள்ளவளோ ஒப்புவமையில்லாத வாழ்க்கைத்துணை.உலகம் எதைக் கொண்டாடும்? முந்தியதையா? இல்லை, மற்றதையா? இரண்டாவதையே உலகம் கொண்டாடும். ஏன்?

வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டற்பாலது முக்கிய மாக ஒன்று. அதுவே மனைமாட்சி.

இத்துடனா? மாண்புள்ள மனைவியால் வேறு பயன் களும் உண்டு. அது பற்றி அடுத்துக் கூறுகிறார் வள்ளுவர்.

நல்ல பண்புள்ள இல்லத்தரசியைப் பெற்ற இல்வாழ் வானுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லை. மனையாள் மனைமாட்சியில்லாத கடையவளானால், உள்ளது ஒன்றுமே யில்லை. எனவே மனையாள் மாண்பே வாழ்க்கையில் நிறைவு தரும்; அமைதி தரும்.

மூன்றாவது குறள் இத்தகைய பெண்ணின் நிலைப் பற்றிக் கூறும் அவளுடைய உயிர் நாடி கற்பு. கற்பு என்றால் உறுதி என்று பொருள். மன உறுதி பெண்களுக்கு அணிகலன். கற்புடை பெண்மையினுஞ் சி ற ந் த தொன்றில்லை.

கற்பின் திறன்

அடுத்து வரும் பாட்டுகள் கற்பின் திறனை சிறப்பிக் கின்றன. சிறை வைத்தால், கற்பு காக்கப்படுமா? இல்லை,

47