பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை; நிறையே அவரைக் காப்பதாகும் என்று தெளிவு செய்கிறது ஐந்தாவது குறள்.

மாண்புள்ள வாழ்க்கைத் துணையால் எத்தனையோ நல்ல பயன்களுண்டு. ஆனால் மாண்புள்ள ஒரு பெண் என்று எப்படித் தெரிந்துக் கொள்வது? புரிந்துக் கொள்வது?

கணவனைத் தெய்வமாகத் தொழுவாள். அதனால் இயற்கையைக் கூட மாற்றலாம்.

‘பெய்யெனப் பெய்யும் மழை.’

முன் குறட்பா கற்பு காத்தல் எங்கனம் என்று சொல்லப்பட்டது. இப்பாட்டில் கற்புக் காத்தலின் ஆற்றல் சொல்லப் படுகிறது.

கற்புடைய ஆடவனை ஒர் கற்புக்கரசி கணவனாகப் பெற்றால் தேவலோக போகத்தை இகலோகத்திலேயே பெறுவர் என்று விவரிக்கிறது எட்டாவது குறள்.

அடுத்து வருவது மீண்டும் எதிர்மறை. ஒருவன் நல்ல தோர்மனையாளைப் பெறாவிட்டால் அவன் எவ்வாறு இருப் பான்? அவன் சோர்ந்து விடுவான்; வீறு நடையிராது; இந்த எதிர்மறை வாயிலாக எச்சரிக்கை செய்கிறார் இக்குறளில்,

அது சரி! இவ்வளவு சொல்லி விட்டாரே? மாண்புடைய வாழ்க்கைத் துணை அப்படி இன்றியமையாததா என்ன? இது மிகையாகாதோ?

ஆகாது, ஆகாது!

வாழ்க்கைத் துணையின் அணி யாது?

மனைமாட்சி மங்கலமாவது எப்போது? நன் மக்கள் பேற்றின்போது மங்கலம் ஆகிறது. முழுமையும் பெறுகிறது. ஆக, வாழ்க்கைத் துணையின் பொலிவையும் அணியை யும், இவ்வதிகாரத்திலுள்ள கடைசிக் குறட்பா விளக்கும்.

4 &