பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பேறு

மாண்புடை இல்லறத்தின் சிறப்பு நல்ல மக்களைப் பெறுவதே. இங்கு வள்ளுவர் ‘மக்கள் என்று குறிப்பிடுவது நன் மக்களைப் பெற்ற மக்கள் எல்லாரும் நன் மக்கள் ஆவாரோ? ஆகார்: ஒருக்காலும் ஆகார். அதனால் நன் மக்களைப் பெறுவதே மாண்புடை இல்லறத்தின் சிறப்பு.

மக்கட் பேறு அதிகாரம் பொருள் அடிப்படையில் 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதல் பிரிவு மக்கட்பேற்றின் விழுப்பம். இதைப் பற்றி முதற்பா கூறும்.

இரண்டாவது பிரிவோ மக்கட்பேற்றால் விளையும்

பயன் பற்றி விளக்கும், இதை இரண்டாவது குறட்பாவில்

காணலாம்.

மக்களே சிறந்த செல்வம். இது மூன்றாவது பிரிவு. இதை எடுத்துக் காட்டுவது மூன்றாவது குறட்பா.

நான்காவது பிரிவாக உள்ளது மக்களால் பெறும் இன் பம். இந்த இன்பம் இடம் பெறுவது நான்கு, ஐந்து ஆறு குறட்பாக்களில்.

இத்தகைய மக்களுக்கும் பெற்றோர்க்குமுள்ள இயைபு யாது? இது பற்றிக் கூறுவது ஐந்தாம் பிரிவு. கடைசி நான்கு குறட்பாக்களின் பொருள் இது பற்றியதே.

நல்ல பெற்றோருக்கு நற்பெயர் பெற்றுத் தருவது நன் மக்களே. எனவே வாழ்வில் அடையத்தக்க பேறுகளில் சிறந்தது மக்கட்பேறு.

நன்மக்களைப் பெறுவதால் என்ன பயன்? இதற்கு வள்ளுவரே பதிலளிக்கிறார் இரண்டாம் குறளில். நன் மக்களைப் பெறுவோரை பின்னே எப்பிறவியிலும் தீமைகள் அணுகாவாம்.

49