பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வங்களுள்ளே சிறப்பு வாய்ந்தது மக்கட் செல்வம். ஏன்?

பண்புடை மக்களைப் பெற்றால், அவர்கள் பெற்றோ ரின் மதிப்பிலா செல்வம்; ஈடு இணையற்ற செல்வம். பெற் றோர் தம் நன்வினையால் மட்டும் இப்பேறு கிட்டும்: மற்றவையினால் அல்ல.

சரி, இந்த மக்கள் எல்லாராலும் இன்பம் உண்டோ? நிச்சயம் உண்டு. அந்தக் குறைகளை நோக்குவோமா?

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்”

அடுத்து வரும் இரு குறள்களும் இந்த இன்பத்தையே விவரிப்பன.

இப்போது அந்த இன்பத்தில் நாமும் பங்கு கொள் Gaufritim ?

ஒரு குழந்தை; அருமையாகத் தாம் பெற்ற குழந்தை; அது என்ன செய்கிறது? அருகே இருக்கிறது ஒரு பாண்டம். அதிலே கூழ் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தை தன் சிறு கையை அந்தப் பாண்டத்திலே விடுகின்றது; எடுக்கிறது; உதறுகிறது: எறிகிறது: இறைக்கிறது; தரையில் தேய்க் கிறது. உடம்பிலும் பூசுகிறது; தலையிலும் அப்புகிறது.

இவ்வளவுடன் நிற்கிறதா? இல்லையே! இன்னும் எத்த னையோ சேட்டைகள்; சிரித்துக் கொண்டே செய்கிறது. இதை நாம் எப்படி அறிகிறோம். அளாவிய என்ற ஒரு சொல் எத்தனையோ கோடி செயல்களை எடுத்து எடுத்து சொல்கிறது.

சிறு கையால் அளவளாவது பற்றி புறநானூற்றுச் செய்யுளின் ஒரு பகுதி மூலம் பரிமேலழார் எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார்?

50