பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சாதாரண நிகழ்ச்சி பேராற்றல் படைத்தவரிடம் எத்துணை பெருமை பெறுகிறது!

இது தவிர மக்கட் பேற்றினால் வரும் இன்பங்களை அடுத்து வரும் இரு குறள்களில் காணலாம். பெற்றோரது உடலை மக்கள் தீண்டுகின்றனர். அது தரும் இன்பம்தான் எவ்வளவு. மழலையை உதிர்க்கும் செல்வனின் சொற்கண்ளக் கேட்ட பெற்றோருக்கு காதுகளுக்கு வேறு இன்பம் ஈடாகுமா? இந்த மழலைச் சொற்களின் முன் குழலோசை இனிதாகுமா? ஆகாது, ஆகாது!! யாழ் மழலை இன்பம் யாழிசையினும் மிக மிக இனிது.

இந்த இன்பமூட்டுவதுடன் மக்கள் பணி தீர்ந்து விடு கிறதா? இல்லை! பெற்றோருக்கும் மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு; அதே போல் மக்களுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. இதனையே அடுத்து வரும் நான்கு குறட்பாக்களிலே தெளிவாக்குகிறார் பொய்யா மொழியார். தந்தை மகனுக்கு ஆற்றவேண்டிய கடமை யாது? அவர் தம் மகனை கற்றறிந்தோர் சபையில் முந்தியிருக்கச் செய்தல் வேண்டும். இந்த சபைகளிலுள்ள கற்றறிந்தோர் எத்தகையோர்? அவர்கள் ஒழுக்கமுள்ள கற்றறிந்தோர். இவர்களுடைய சபைகளில் முந்தியிருக்கக் கூடிய கல்வியறிவை தந்தை புகட்டல் வேண்டும்.

மகன் தந்தைக்கு இதற்குப் பதிலாகச் செய்யும் கடமை யாது?

தந்தையின் புகழை நிலைக்கச் செய்ய வேண்டும். ஒழுக்கத்துடன் வாழ்ந்து, நன்மாதிரியாக அனைவரிடமும் நடந்து கொண்டு நல்ல பெயரெடுக்க வேண்டும். இன்னாரு டைய மகன் இவன். ‘இவனைப் பெறுதற்கு இவன் தந்தை என்ன நோன்பு நூற்றானோ!’ என்ற புகழ்ச்சியை தந்தைக்குப் பெற்றுத் தருவதே மகனின் கடமை.

தந்தைக்கு மட்டும்தான் இந்தப் புகழ்ச்சியா? தாய்க்கு இதில் பங்கில்லையா? நிச்சயம் உண்டு. எல்லோரும் தன்

A 440 — 4 53