பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனைச் ‘சான்றோன், சான்றோன்!” எனப் புகழ்வதைக் கேட்கிறாள் தாய். பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி எதைவிடப் பெரிது?

அவனை மகனாகப் பெற்றெடுத்த போது ஏற்பட்டதே அந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பெரிது; மிகப்பெரிது; மிக மிகப் பெரிது, சும்மா வருமா இன்பம்?

இந்த உவகை சுலபமாக, சும்மா வருமா? வராது. அதற்குத் தாய் தன் மகன் உலகுக்கு அன்பு செய்து நன்மை செய்பவனாக முதலில் நினைவை ஊட்ட வேண்டும்; வெறும் பால் உடலை வளர்க்கும். இந்த நினைவோ அறிவை வளர்க்கும்; உலகிற்கும் தொண்டு செய்யும்,

வளர்ப்பு முறையைச் சார்ந்தது இந்த அறிவு வளர்ச்சி. எனவே பெற்றோர் தம் மக்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். தம் மக்களை அறிவுடையவராக இருப்பதற்கு மட்டுமன்றி மாநிலத்து மன்னுயிர்க்கும் நல்லதையே செய்யும் படி மக்களை வளர்க்க வேண்டும்.

இப்பெரும் பணியில் தாயின் பங்கு மிக அதிகம்.

அன்புடைமை

அன்புடைமை மக்கட்பேறுக்கு அடுத்துவரும் அதிகாரம். ஏன்? உலகைக் கட்டி ஆள்வது அன்பு. அன்பே கடவுள் : கடவுளே அன்பு. அன்பு மிகுந்தால் தியாகம் பிறக்கும்; தியாகம் தன்னல அழிவைக் குறிக்கும். மக்களை ஈன்ற தாய் தந்தையர் தியாக மூர்த்திகளாகின்றனர். அன்புள்ள இடத்திலே தியாகம் பிறக்கும்; வளரும்; பரவும்; நிகழும்.

நான்கு பகுதிகளையுடையது இந்த அன்பு.ை மை அதிகாரம்.

54