பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் இயல் முதல் பகுதி, முதலிரண்டு பாக்கள் அன்பின் இயல் பற்றியது.

அன்பின் இயல் யாது? அன்பைத் தடுக்க இயலாது. அது கண்ணிர் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்தும். அதை தடுக்கவோ, அடைக்கவோ முடியாது: அத்துடனா? அன்புடைமையாவது பிறர்க்கென்று வாழும் இயல்புடையது.

இரண்டாம் பகுதி பிறவிப் பயன் அன்புடைமையின் உண்மை. மூன்று முதல் ஆறு குறட்பாக்கள் வரை பிறவிப் பயன் அன்புடைமையில் உண்மையும் பற்றியது.

பிறப்பு எப்படி நிகழ்கிறது? இரு உயிர்கள் அன்பினால் இணைவதால், ஏற்படுகிறது. எனவே உயிர் உடல் தாங்குதல் என்பது அன்பு நெறியில் நிற்பதாகும். எவரை உயிருள்ளவர் என்பது? எவர் எப்போது பிணம்’ எனக் கருதப்படுவர்?

அன்புள்ள உடலே உயிருடையது. அன்பில்லா உடல் உயிரற்றப் பிணம் போன்றது. அது மட்டுமா? அகத்தில் அன்பில்லாவிடின், புற உறுப்புக்களால் என்ன பயன்? எனவே என்ன தெரிகிறது? உயிர் வாழ்க்கைக்கு அன்பு மிகமிகத் தேவை.

அடுத்த பகுதி இல்வாழ்க்கையில் அன்பெழுதலும் அதன் விளைவு பற்றியும் கூறுவது. இதைப் பற்றி கூறும் குறட்பாக்கள் ஏழு, எட்டு, ஒன்பது ஆகியன.

அன்பு செலுத்துவதில் அறவழி அன்பு எங்கே செலுத்து கிறோம்? இல்லறத்திலே. அதன் பயனே மக்கட்பேறு. அத்வே இல்வாழ்க்கையின் இன்டப் பேறு இது எப்போது ஏற்படும்? அன்பு கொண்டொழுகும் போது.

ஏழாம் குறளின் கருத்தும் இதுவே. இது அன்பின் எழுச்சியும் விளைவும் பற்றி விவரிப்பது.

55