பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்புப் போராட்டம் ஒய்ந்து விட்டது. கள்ளுக்கடை மறியல் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது!

கோயில் நுழைவு வேண்டி உண்ணாவிரதம். தீண்டாமை ஒழிப்புப் போராட்டம். இவ்வாறு எங்கும் போராட்டம், போராட்டம், போராட்டம்!

மகாத்மா காந்தி தென்னாடு போந்தார். காந்தீய மின்சக்தி எங்கும் பாய்ந்தது. எங்கும் எழுச்சி, எழுச்சி, எழுச்சி! வேகம், வேகம், வேகம்! எழுச்சியும் வேகமும் இளைஞரை ஆட்கொண்டன. என்னையும் அவை பற்றிக் கொண்டன.

விளைவு?

‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலைக் கண்டவுடன் சிக்கெனப் பிடித்தேன்.

நூல் மட்டுமா என்னை கவர்ந்தது? நூலாசிரியரும் கவர்ந்தார். அவரைக் காணத் துடித்தேன்; அறிய ஆர்வம் எழுந்தது,

சிவகுருநாதனை அணுகினேன். தம் கரந்தைத் தமிழ்ச் சங்கம் மூலம் திரு.வி.க.வுடன் தொடர்பு கொண்டிருந்தார் சிவகுருநாதன். எனவே எவ்வாறேனும் திரு.வி.கலை காணல் வேண்டும். அவர் தம் பத்திரிகையில் எழுத வேண்டும். நானும் பத்திரிகை ஆசிரியனாதல் வேண்டும் நூல்கள் எழுதல் வேண்டும் என்ற அவா மேலிட்டது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஐந்தாம் ஆண்டு. சுதந்திரச் சங்கு என்ற பத்திரிகையிலே உதவி ஆசிரியனாகப் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றேன்.

‘சுதந்திரச் சங்கு’ என்ற பெயர் இப்போது பலருக்குப் புதிதாகத் தோன்றும். ஆனால் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த உப்புப் போரின் போது சுதந்திரக் சங்கு பெருந்தொண்டு ஆற்றியது. சுதந்திரச் சங்கு”