பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் ஆறு குறட்பாக்கள் இப்பொருள் பற்றியது.

அடுத்த பகுதியில் வள்ளுவர் இச்சிறப்பைச் செய்யத் தவறினால் என்னாகும் என்பதை அறிவுறுத்துகிறார் விருந்தோம்பாமையின் இழிவு பகுதியில். எட்டாம், ஒன்பதாம் குறட்பாக்களில் இப்பொருள் இடம் பெறுகிறது.

அடுத்து வரும் பகுதி விருந்தோம்பும் முறை. ஆனால் குறட்பாக்களில் இதை தமது ஏழாவது குறட்பாவிலேயே விவரிக்கிறார் பொய்யா மொழியார். இம்முறையின் முக்கியத்துவம் கருதி முன் குறட்பாவிலேயே வைத்தார் போலும்!

விருந்தோம்பலின் பயனிலையே கடைசியில் வரும் பகுதி. கடைசிப்பகுதியான இப்பொருள் பகுதி, கடைசி குறளில் கூறப்பட்டுள்ளது.

விருந்தோம்பல் ஏன்?

இல்வாழ்க்கையின் உயிர்நாடி விருந்தோம்பல். விருந்தோம்பல் இல்லாவிடில் இல்வாழ்க்கை, இல்வாழ்க்கை ஆகாது. விருத்தோம்பலால் வறுமை வராதோ? வரவே வராது. விருந்தோம்பும் ஒருவன் வறுமையுற மாட்டான். செல்வம் அவனைத் தேடி வரும். இல்லத்தில் செல்வம் கொழிக்கும். தெய்வம் அருள் சொரியும்; பெரியோர் ஆசி என்றுமிருக்கும். விருந்தினர் மனம் மகிழும் முறையில் ஒம்புவது மிக்க சிறப்பாகும். அவ்வாறு செய்யாது கிடப்பது LDL-6&#f).

விருந்தோம்பலின் விழுப்பம்:

வள்ளுவர் விருந்தோம்பலின் விழுப்பம் குறித்து என்ன சொல்கிறார் பார்ப்பே மா? இல்வாழ்க்கையில் ஏன் அன்பை வளர்க்கிறோம்? விருந்தினரைப் பேணி உபசரிப் பதற்காக. அத்துடனா? அவர்களுக்கு உபகாரம் செய்வ தற்காகவும் அன் ை வளர்க்கிறோம். இந்த முதல் பாட்டு இல்வாழ்க்கைக்கும் விருந்தோம்பலுக்கும் உள்ள தொடர்பை

9