பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்த்துகிறது. விருந்தினர் இருக்கும்போது அவர்களை விடுத்து தான் மட்டும் உண்ணுதல் கூடாது. இடைவிடாது விருந்தினரையே உபசரித்து வந்தால், நமக்கு பாதிப்பு ஏற்படாதா என்ற ஐயம் தோன்றுமானால் அதற்கும் விடை கிடைக்கிறது அடுத்த குறளில். விருந்தினரை உபசரிப்பதால் வாழ்க்கை ஒரு நாளும் கேடுறாது. வறுமைத் துன்பமோ பிற துன்பங்களோ ஒருநாளும் அண்டாது. ஆனால் ஒன்று. விருந்தினரை சரியானபடி உபசரித்தால்தான் செல்வம் பெருகும்.

விருந்தினரை உபசரித்தல்: எப்படி?

விருந்தினரை உபசரிப்பது ஒரு தனி கலை. அவர்களைக் கண்டவுடன் முகம் சுருங்கக் கூடாது. முகமலர்ந்து உபசரிக்க வேண்டும். முகமலர்ந்து விருந்து ஒம்புவோன் வீட்டில் செல்வம் குறையவே குறையாது. மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

அள்ளி, அள்ளி செலவு செய்தால், குறையாதோ? செல்வம் குறையாதென்றாலும் விளைச்சல் இதற்கு ஈடு கொடுக்குமா? ஒ, தாராளமாக! எவன் விருந்தினரை உபசரித்து, மிகுந்தவற்றை உண்கிறானோ, அவனது நிலத்தில் விளைச்சல் எப்படியிருக்கும் தெரியுமா? விதை இடுதலே இல்லாமல் நிலம் தானே விளையும். அப்போது விளைச்சல் இந்த விருந்தோம்பலுக்கு ஏற்றவாறு பெருகுமன்றோ?

விருந்தோம்பல்-ஒரு தொடர்ச்சியான செயல்:

அதுவும் சரி, ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு விருந்தோம்ப வேண்டும்? ஒரு மாதத்தில் எத்தனை நாள் விருந்தோம்ப வேண்டும்? இத்தகைய ஐயப்பாடுகள் தீர்க்கப் பட்டுள்ளனவா?

இந்த சந்தேகங்களும் தெளிவுபடுத்தப் படுகின்றன. அடுத்த குறளே இதைத் தீர்க்கும். விருந்தோம்பலுக்கு எண்ணிக்கை கூற முடியாது. கால வரையறைக்குள்ளும் உட்படாது. வந்த விருந்தினரை பேணி, இனி வரும்

60