பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவனுக்கு ஆபரணமாவது எது? பணிவுடைய இன்சொற்களே. பொன்னும் மணியும் ஆபரணம் ஆகா. ஒருவனுக்கு உரிய அணி அவனது இன்சொல். மற்றவை அல்ல.

ஈகையினடியில் இன்சொல் நிலவுதல் வேண்டும் என்று கூறியது முன் குறள். இப்பாட்டில் இன்சொல்லே ஒருவற்குரிய அணி என்று தெளிவாகிறது. இன்சொல் வழி பிறக்கும் ஈகை அணி போன்றது.

ஒருவற்கு அணி

அணியப்படுவது அணி. மக்கள் தங்கள் தங்கள் நாகரீகத்திற்கேற்ப அணி பூணுவது வழக்கம். முதன் முதல் கண்ணைக் கவர்வது அணியே. அணிகள் இருவிதம். ஒன்று புற அணி; மற்றொன்று அக அணி. புற அணி உடலை அலங்கரிப்பது: அக அணி உள்ளத்தை வெளிப்படுத்தும் செய்கைகள், சொற்கள் ஆகியன.

பணிவுடையன் இன்சொலனாதல்

அடக்கமுடையவனுடைய அணி இன் சொல். பணிவு இன்றேல் இன்சொல் ஆகாது. பணிவு எல்லோரிடமும் இராது; ஏன் சிலரிடம் தலையே காட்டாது. சுருக்க மாகச் சொல்லின் முனைப்பற்ற இடத்தில் நிகழ்வது பணிவு. இதை தாயுமானார், ‘கருவி கரணங்களோய்ந்த தொண்டர்கள்’ என்றார்.

‘அகனமர்ந்த ‘பணிவுடமை ஆகிய இரு சொற்களும் ஒரே கருத்தைக் கூறுவன. அதாவது பணிவுடமை, மாசு அறாத இடத்தில் தோன்றுமா? இடம் பெறுமா? நிற்காது. மூன்றும் நடக்கவே நடக்காது.

எனவே பணிவுடமையினின்று இன்சொல் தோன்று தலால் ‘பணிவுடையன் இன்சொலனாதல்’ என்றார் தமிழ்

65