பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைப் போரின் முரசு போர்ச் சங்கு என விளங்கியது. வாரம் மும்முறை. சிறிய அளவு. பக்கங்களும் சிலவே. விலை என்ன தெரியுமா? காலணா! அதாவது இப்போதைய இரண்டே பைசா! அந்தக் காலத்திலே அறுபதாயிரம் பிரதிகள் செலவாயின.

அப்பத்திரிகையை வெளியிட்டவர் சங்கு கணேசன், இவர் பரம தியாகி. அடக்குமுறைச் சட்டத்துக்கு அஞ்சாது பலமுறை சிறை சென்ற சீரியர். அவர் தமது ஆசிரியர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.

அப்பத்திரிகையின் .ெ ச ய ல க ம் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் இருந்தது. மாலை நேரத்தில் தேசத் தியாகிகள் பலர் அங்கு வருவர். தமது அநுபவங் களைக் கூறுவர், மெய் சிலிர்க்கும் அப்போது.

ஒரு நாள், பெரியவர் ஒருவர் வந்தார். பத்திரிகைத் துறையில் பழகியவர். திரு.வி.கவை நன்கு அறிந்தவர்.

“இளைஞர் ஒருவரைத் திரு.வி.க தேடுகிறார். அவ்விளை ஞர் ஆங்கிலம் அறிந்தவராயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்தி லிருந்து தமிழாக்கம் செய்யும் திறமை பெற்றிருத்தல் வேண்டும். பிழையின்றித் தமிழ் எழுத அறிந்திருக்க வேண் டும். தேசிய உள்ளம் படைத்திருக்க வேண்டும். இத்தகைய ஒருவரைத் தம் பத்திரிகைக்குத் தேடுகிறார்’ என்றார் அவர். அப் பெரியவர் என்னை நன்கறிந்தவரே. “என்னைத் திரு. வி. கவிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டி னேன்.

‘உன்னைப் பற்றி அவரிடம் சொல்லி விட்டேன், நாளையே நீ சென்று அவரைப் பார்’ என்றார் பெரியவர். கனவு நனவாகியது.

பெரியவர் கூறியவாறே மறுநாள் சாது அச்சுக்கூடம் சென்றேன். திரு. வி. கவைக் கண்டேன். மறுநாள் வருமாறு அவர் கூறினார். மறுநாளும் சென்றேன். சிறிது நேரம் பேசி விட்டு மீண்டும் வரச்சொன்னார்.

vi