பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

திரு. வி. கவும் சைவமும்

சைவம், சைவம் எள்கிறார்களே அஃது என்ன? மக்கள். தொன்மையோடு, பொருளுண்மை-சமரச நிலை முதலியன வுடன் கூடிய மெய்ப்பொருள் வழிபாடு. சைவத்திலே. இந்த மெய்ப்பொருளை “சிவன்’ என்றழைத்தனர். சிவஞான சித்தியார் இதைப் பற்றி எள்ன கூறுகிறார்?

“இதுவாகும் அதுவல்ல வெனும் பிணக்கதின்றி திேயினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண கிற்பது யாதொரு சமயம் அது சமயம் பொருள் நூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே

அடங்கிவிடும் அவை விரண்டும் அரனடிக் கீழடங்கு'* பிற சமயங்களைப் பொய் என்று தள்ளாதது உண்மை யான சைவம். இவர்கள் தொழும் சிவனோ, அன்பு உருவான வன். சைவம் என்றார் சிவசம்பந்தம், சிவம்+அன்பு= இது சிவசம்பந்தம்; இதுவே அன்பு சம்பந்தம். ‘அன்பே சிவம்’ இந்த நெறி பத்றி ஒழுகுவோர் எல்லோரும் சைவரா வாரோ? இல்லை, இல்லை.

இந்த அன்பு சமயத்தில் ஒழுகுவோர் சாதி மதம் பாராட்ட மாட்டார். எவ்வுயிர் இடத்திலும் அன்பு கொண்

  • சைவ சமய சாரம்’, பக். 6.

68