பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொழுகுவர். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்து வோரே சைவர்.

சைவத்தின் ஆணிவேர் அன்பை விடுத்து, ருத்ராட்சம், விபூதி மட்டும் அணிந்து திரிந்தால் ஊரை ஏமாற்றலாம்; மக்களை ஏமாற்றலாம்; நாட்டை ஏமாற்றலாம். ஆனால் மனசாட்சியை ஏமாற்ற முடியுமா? விபூதி தூய்மை யைக் காட்டும் புறச்சின்னம். ஆனால் அகத்திலே மாசு இருந் தால், சைவராவது எங்ஙனம்?

அன்பு நெறிக்கு அடையாளமாக ஏற்பட்ட புறச் சின்னங்களை மட்டுந் தாங்கி, உயிர்களுக்குத் தீங்கு நினைப் பவர் சைவர் ஆவாரோ? ஆகார்.

உண்மையான சைவம் ஓர் ஊர், ஒரு நாடு என்ற சிறு எல்லைக்குள் அடங்குவதில்லை.

“எவ்வுயிரும் பராபரன் சந்நிதியாகும்; இலங்கும் உயிர் உடலனைத்தும் சசன் கோயில் என்ற கொள்கையில் சிறந்து விளங்கும் மக்கள், எந்நாட்டவர் ஆயினும் சரி, எக்குலத்தவராயினும் சரி, எவ்வேடத்தவர்களாயினும் சரி, அவர்கள் அனைவரும் சைவரேயாவர்.*

இதை வலியுறுத்தியே மாணிக்க வாசகர்,

“தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

என்று திருவாய் மலர்ந்தருளினார் போலும்.*

சைவ வழிபாடு எத்தனை வகையுண்டு? இரு வகை யுண்டு. ஒன்று ஆலய வழிபாடு. மற்றொன்று நடமாடுங் கோயில்களாகிய உயிர் வழிபாடு. இவைகளில் எது சிறந்தது:

  • சைவத் திறவு - உ * சைவ சமய சாரம் - வழிபாடு - பக். 11.

A 440–5 69