பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறோம் பூமியிலே. மொத்த பூமியையும் நம்மால் ஒரே நொடியில் பார்க்க முடிகிறதா? முடிகிறது. எவ்வாறு? பெரிய உருவங்களைச் சிறிய உருவங்களாகவுங் காட்டும் கருவிகள் மூலம் பார்க்கிறோம். இறைவனை அப்படி காண முடியுமா? முடியாது, முடியாது! ஏன் முடியாது? இயற்கை அன்னையைப் பார். அங்கே அகண்டாகாரமாக பார்த்த இடமெல்லாம் நிறைந்து நிற்கிறான் இறைவன். இப்பெரு வடிவை உள்ளும் முறையில், நினைப்பற நினைந்து இறைவன் அல்ல பிறிது மற்றின்மை கண்ட அகக்கண்ணா ளர்கள் அருள் வழிகோலியிருக்கிறார்கள். அவ்வழியே சைவ சமயத்தின் திறவு என்க.”*

இந்த நூலில் திரு.வி.க சிவனின் திருவுருவ விளக்கத்தில் கூறுகிறார்.

‘இறையின் உருவம் செம்மை-நெருப்பு என்று சொல் லப்பட்டது. செம்மையின் விளிம்பில் நீலமிருத்தலைக் காண் கிறோம்.’

“செம்மையில் நிலமும், நீலத்தில் செம்மையும் மிளிர்தல் இயல்பு.’’**

‘செம்மை எது? நீலம் எது? செம்மை வெம்மையைக் குறிப்பது; நீலம், தண்மையைக் குறிப்பது.

இவ்வெம்மை ஆணென்றும், தண்மை பெண்ணென்றும் உள்ளத்தில் பதியுமாறு உருவகிப்பன.'***

உலகம் ஆண் பெண் மயமாக இருத்தலை குறிக்கும் படியே மாணிக்கவாசகர்:

தோடுடைய செவியன்’ என்றார்.

  • திரு.வி.கவின் சைவத்திறவு-சகr. சைலுத்திறவு-திருவுருவ விளக்கம்-பக், ச அ * சைவ்த் திறவு-பக். சக

7 I