பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தோடு-பெண்மையையும், செவியன் ஆண்மையையும் குறிக்கும். ஒங்காரமே உலகிலுள்ள எல்லா ஒலிகளுக்கும் தலையாயது. இதையே தோடு குறிக்கும் என்றார். அறத்தைக் காட்டுவது விடை சுடலைப் பொடி-இறை வனின் மறுபதிப்பான மனிதனின் ஆரம்பமும்-முடிவும் ஒன்றே என்று கூறுவது.*

இவ்வாறு ‘இறையை அங்கிங்கெணாதபடி என்று அறிய முடியாதார், தேவாரப் பாட்டை ஊன்றிக் கவனித்தால் பல நுட்பங்கள் புலனாகும்.

‘தோடுடைய செவியன் விடையேறி

ஒர் தூ வெண்மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என துள்ளங்கவர் கள்வன்.’ இது மட்டுமா?

‘ குறியே போற்றி, குணமே போற்றி

நெறியே போற்றி, நினைவே போற்றி’

என்றார் மாணிக்க வாசகர். அலைப்பாயும் மனமும் ஆண்டவனும்

அலைப்பாயும் மனம் ஆண்டவனை வெறுமையில் காண முடிகிறதா? இல்லை. அவனை நினைப்பதே அருமை. பின்னே எப்படித்தான் நினைப்பது? எந்த நேரத்தில் நினைப்பது? காலக் கட்டுப்பாடு உண்டா? இல்லை. இறைவனை எங்கும் காணலாம்; எந்நேரத்திலும் நினைக் கலாம். காலவரையறை இல்லை; இங்குதான் நினைக்க வேண்டும் என்ற நிர்ப்பத்தமும் இல்லை. என்றாலும் நினைப்பதுதான் கடினமாக உள்ளது. யாருக்கு? பெரும் பான்மையோருக்கு ‘ எல்லாவற்றிலும் கலவாது, எல்லா வற்றிலும் கலந்து’ என்ற சிறப்புகள் கேட்பதற்கு நன்றாகவே உள்ளன. நடைமுறையில் அவனை நினைக்க

  • From dust we come and unto dust we go?

72