பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வியல்பு உதவி செய்வதில்லை. எனவே ஆண்டவனை நினைத்து, அந்த நினைப்பை நிலை நிறுத்த வேண்டுமானால் முதலில் அவனை நினைவூட்டக் கூடிய ஒரு குறியில் நெஞ்சை நிலை நிறுத்த வேண்டும். அக்குறி, கண்ணையுங் கருத்தையுங் கவரக் கூடியதாகவும், வனப்பு உடையதாகவும், ஓவிய மாகவோ, சிற்பமாகவோ இருந்தால் நல்லது. அக்குறியில் முதலில் நெஞ்சு படியும்; சிறிது காலத்திற்குப் பின் அலையும் நெஞ்சு ஒரு நிலையுறும். அந்நிலைத்த நெஞ்சில் ம ற் ற எண்ணங்கள்-முக்கியமாக தீய எண்ணங்கள் அருகும்; நல்லெண்ணங்கள் பெருகும். இதற்கென்றே திருக்கோயில் வழிபாடு. ஏற்பட்டது. ஆற்றல் பெற்ற மனம் எந்த இடத்தையும், தன் நல்லெண்ணத்தில் கோயிலாக்கிக் கொள்ளும்.

திருக்கோயில் வழிபாட்டின் நோக்கம் விழுமியது” தெய்வங்களின் அடிப்படைத் தத்துவங்கள்: திருக்கோயில்களில் குடி கொண்டிருக்கும் சில தெய்வங் களின் அடிப்படைத் தத்துவங்களை தமது உள்ளொளி'யில்(உள்ளுணர்வும் வழிபாடும்** எள்ற பகுதியில்) மிகவும் தெளிவாக விளக்குகின்றார் திரு.வி.க.

அர்த்த நாரீசுரம்

அர்த்த என்றால் பாதி. நாரீ என்றால் சக்தி-பெண். சுரம் என்றால் ஆண் சக்தி.

அர்த்த நாரீசுரம் பெண்மையும் ஆண்மையுஞ் சேர்ந்த ஒன்று. இது எதை உணர்த்துகிறது?

‘இயற்கை உலகை நோக்க நோக்க அர்த்த நாரீ சுரத்தின் நுட்பம் விளங்கும்.’’ இயற்கை-புல் பூண்டு களிலிருந்து மேநிலை மக்கள் வரை எல்லாமே ஆண் பெண்

  • திரு.வி.க. நினைப்பவர் மனம், பக், 12. உேள்ளொளி.பக். 154 ,

73