பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயம் தான். இதையே அர்த்த நாரீசுரம் விளக்கும், பெண் ஆணாயிலங்கும் இயற்கை உலகின் படம்-ஒவியம் அர்த்த நாரீகரம்.’’

விஞ்ஞான ஆராய்ச்சி

இக்கால விஞ்ஞான உலகம் பலதிற ஆராய்ச்சி செய்து எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள சக்திகள் இரண்டு என்றும் அவை புரோடான், எலெக்ட்ரான் என்றும் கண்டு பிடித்திருக்கிறது. புரோடான்-ஆண்சக்தி; எலெக்ட்ரான்பெண் சக்தி, இவ்விரண்டு சக்திகளும் சடம். இந்த சட சக்தி முதலாக உள்ளது சித் சக்தி. இதையே நம் நாட்டவர் இலிங்கம் என்று வழிபடுகின்றனர்.

‘அண்டம் இலிங்க மயம்; அணு இலிங்க மயம்; உடல் இலிங்க மயம்: உயிர்இலிங்க மயம்; எல்லாம் இலிங்க மயம்.*

சிவன்-சித்து அல்லது ஆண்; சக்தி-அம்மன் அல்லது பெண்.

அரங்கநாதன் உரு-தத்துவம். அரங்கநாத வடிவம் எப்படியிருக்கிறது?

பாற்கடலில் பாம்பனை மீது பள்ளி கொண்டிருக் கிறான் அரங்கன்.

பாற்கடல், விந்து அல்லது ஒளிமயத்தைக் குறிக்கும். அரவனை நாதத்தைக் குறிக்கும். நாதத்துக்கு மேல் தத்து வமே கிடையாது. அரங்கன் நாத அலைகளான பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கிறான். இது எதை உணர்த்தும்? பள்ளி கொண்டான். மெளனத்தின் சின்னம்; பிரம்மனோபடைப்பை-இடையறா ஆக்கத் தொழிலைக் குறிப்பன.

  • உன்ளொளி-பக், 169.
  1. to # 3 x 3 o’

74