பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பிட்ட நாளும் வந்தது: குறிப்பிட்ட நேரமும் வந்தது. சென்றேன். திரு. வி. க., உலகநாத முதலியார் இருவரும் இருந்தனர். ‘வா தம்பி!’ என்று அழைத்தனர்.

‘உனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்பது பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது அதிக சம்பளம் கொடுக்க முடியாது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ கேள்’ என்றார் திரு. வி. க.

‘தும் கடன் அடியேனைத் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பதிலளித்தேன்.

எனது பதில் கேட்டுத் திரு வி. க மகிழ்ந்தார்: உலகநாத முதலியாரைப் பார்த்தார். உலகநாதர் உள்ளே சென்றார். பஞ்சாங்கம் எடுத்து வந்தார். எனது பெயர், நட்சத்திரம், இராசி முதலியவற்றைக் கேட்டு அறிந்து கொண்டார். ஒரு நல்ல நாள் குறிப்பிட்டு, அன்று வரச் சொன்னார். அவ்வாறே வருவதாகக் கூறி விடைபெற்று எனது வீடு திரும்பினேன்.

குறிப்பிட்ட நல்ல நாளன்று வேலைக்குச் சென்றேன். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் நவசக்தி'யின் உதவியாசிரியன் ஆக வேலையைத் தொடங்கினேன். இது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு, ஜூன் மாதம். அன்று முதல் அவரது இறுதிவரை நான் வேறு எங்கும் வேலை தேடிச் சென்றேன். அல்லன். ஒராண்டா? இரண்டு ஆண்டுகளா? இல்லை. பதினாறு ஆண்டுகள் அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றேன்.

நான் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். என் தந்தை அறிஞர்கள் வழி வந்தவர். என்றாலும் அவர் மறைவுக்குப் பின், நங்கூரமற்ற கப்பலானோம்.

இந்நிலையில் என் ஆசிரியத் தெய்வம், பணி பயில வந்த என்னை, “தந்தையினும் களி கூரத் தழுவினார்’ என்றால் எவ்வளவு உண்மை!

vii