பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் கருணை விழி, பொன்மேனி. மயில் ஊர்தி, கோழிக் கொடி, வள்ளியும் தெய்வயானையும், வேலுங் கொண்ட காட்சி, கண்கொள்ளாக் காட்சி!

இவ்வோவியத்தின் உள்ளுறை என்ன?

தோகை விரித்தாடும் மயில் பரந்த இயற்கை உலகைக் காட்டுவது. அதன் மீது அமர்ந்திருக்கும் அழகனே முருகன். அவனே இயற்கை: இயற்கையே அவன். மயில் விந்துவைக் குறிக்கும்; அதை நடத்துபன் முருகன் விந்துவுக்கு மேல் நிற்பது நாதம். அதைக் குறிப்பதே கோழியின் கூவல். வள்ளியும் தெய்வயானையும் வேலும் முறையே இச்சா, கிரியா, ஞான சக்திகளைக் குறிப்பன. நாத தரிசனம் ஏற்பட்ட பின்னர் இச் சக்திகள் எழுச்சி பெறும்.

இந்த முருகனை உள்ளன்புடன் வழிபட்டால் இந்த மூன்று சக்திகள் எழுச்சி பெற்று, மனிதனைத் தெய்வமாக்கும்.

கூத்தர்பிரான்

மக்கள் திரளாகத் தில்லைக்குச் செல்கிறார்கள், ஏன்? நடராஜனைக் காண. அது ஒரு கூத்தோவியம்.

‘’ எல்லாவற்றையுங் கடந்து உருவமற்றதாயுள்ள கடவுள் நிலை, போக்குவரவற்றது; அசைவற்றது: தொழில் அற்றது. அதற்கு கூத்தேது? இயற்கையை உடலாகக் கொண்டு அதன் கூறுகள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் கடவுள் நிலைக்குத் தொழில் தானே உண்டாகும். அதற்குத் தொழில் இல்லையேல் இயற்கை எங்ஙனம் இயங்கும்? உயிர்களைத் தன்னைப் போலாக்கவே கடவுள் இயற்கையை உடலாகத் தாங்கி அதை இயக்குகிறது. அதனால் அது தொழிலுடையதாகிறது. அத்தொழில் ஐந்து வகை: அவை ஆக்கல்,அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.*

  • உள்ளொளி, பக். 159,

76