பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஐந்தொழிலும் நிகழ அப்பன் கூத்தாடுகிறன்; நடம் புரிகிறான்.”

தில்லையில் மட்டுமா கூத்தாடுகிறான்? இல்லை, இல்லை!

உலகில் எல்லா படைப்புசளிலும் நடம் புரிகிறான்.

தில்லையில் அவன் ஆடுவது ஆனந்தக் கூத்து. ஆனால் திருவாலங்காட்டிலோ ஊர்த்துவ தாண்டவம்! இம்மாற்றங் கள் ஏன்?

திருவாலங்காட்டில் கோரமான கொள்ளை, கொலை போர் இவைகளைக் குறிக்கும் கோரரூபம் (காளி என்கிறார் கள்). இத்தீய சக்திகளை எதிர்த்துப் போர். இங்கு இரத்தப் புரட்சிக்கு எதிர்ப்பு, கடும் எதிர்ப்பு!!! எனவே உக்கிச தாண்டவம்,

ஆனால் தில்லையில் காதல் நடனம். அம்மையுடன் காதல் நடனம். இது படைப்புத் தொழிலின் அறிகுறி.

அழகை வழிபட்டே, அழகை இறவனை அடைவதற் குரிய சிறந்ததொரு விளக்கத்தை தவப் பெரியார் திரு வி.க. தவிர யாரே தர வல்லார்?

அவதாரங்கள்-உயிர் வரலாறு

அவதாரங்களைப் பற்றியும் கூறுகிறார் திரு. வி. க. நம் நாட்டில் இந்த அவதாரங்களுக்கும் டார்வினின் உயிர் வரலாற்றிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகிறார். இந்த உயிர் வரலாற்றினை டார்வின் வினக்கு முன்னரே நம் நாட்டு கோயில்களில் தசாவதார சிற்பங்கள் செதுக்கப் பட்டன.*

  • தமிழ் நாடும் நம்மாழ்வாரும், பக். 67.

77