பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமரசம்

இந்த சைவ சமயத்திலுள்ள சமரசம் எத்தகையது?

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமயமுண்டு என்று கூறுவது மிகையன்று. தெய்வம் ஒன்றே. அவரவர் அறிவு, ஆராய்ச்சி, அன்பு நிலைக்கேற்றவாறு புலப்படுகிறது.

கிறிஸ்து ஒருவரே சடவுளை ஒர் இடத்தில்

“பரலோக ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது’’’ என்றும்,

பின்னொரு இடத்தில்,

“பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே!”

என்றும், உலகுய்ய ஒதியிருக்கிறார்.

நம் தமிழ்ப் பெரியோர்,

“அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ! என்றனர்.

இந்த உண்மையே கீதையில் கண்ணன் ‘நீ எப்படி

நினைக்கிறாயோ அவ்வுருவில் நான் வருவேன்’ என்கிறான். யாரிடம்? தன்னை வழிபாடு செய்வோரிடம்,

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை ஒரே நோக்கில் அளந்து விட முடியுமா? முடியாது, முடியாது!! இதனையே கம்பர்,

தோள் கண்டார், தோளே கண்டார்’ என்றார்.

‘எச் சமயம் எல்லாச் சமயங்களையும் சகோதர

சமயங்களாகத் தழுவுகிறதோ, அதுவே சமரச நோக்குடைய சன்மார்க்க சமயம்.

78