பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

திரு. வி. கவும் சன்மார்க்கமும்

ஜோதி வடிவில் இறைவனைக் கண்ட மெய்ஞானி இராமலிங்க அடிகள். இந்த இறையைக் காண அவர் பின் பற்றிய வழியோ, சமரச சன்மார்க்கம். பாமரன் ஒருவன் இறை என்ற ஒளிப்பிழைம்பை எங்ஙனம், படிப்படியாகக் காணலாம் என்பதற்கு அவர் காட்டிய ஆறு வழிகள், அவர் தம் அன்பு உள்ளத்தின் எடுத்துக்காட்டு, யோகாந்தம், காலந்தம், நாதாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்ற அம்முறைகளை உறுதியுடன் முயன்று, பின்பற்றினால், படிப்படியாக மனிதனுக்கு மன அமைதி ஏற்பட்டு, அந்த அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங் கணையை’க் காண இயலும்.

யோகம்-தியானத்தைக் குறிக்கும். ஒரு சில நிமிடங்க ளேனும் மனத்தை ஒன்றில் நிலைநிறுத்தி, உலகையே ஆளும் அந்த ஒன்றுடன் இணைக்க முயன்றால், காலம் செல்லச் செல்ல கலப்பு ஏற்படும்.

இந்தக் கலப்பு வெகுளி, காமம், மயக்கம் ஆகியவற்றை விரட்டும். இதுவே காலந்தம் அல்லது மெய்யறிவு.

மெய்யறிவு என் செய்யும்? ஒலியில் அடங்கியதும், ஒலி மயமானதும் ஆன இறையை அறியும், உணரும், இன்பம்

80