பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுகரும். இதுவே நாதாந்தம். நாதத்தில் ஒன்றிய சிவன், சிவனுடனும் ஒன்றி விடும்.

ஒலி மூலம் உணர்ந்தபின், அவன் ஒளிப் பிழம்பான சோதி வடிவைக் காண்கிறான். இறைவனை அருட்பெருஞ் சோதியாகவும்; “சுடரே சூழொளி விளக்கே” என்று ஆண்டவனை விளித்துச் சிக்கெனப் பிடித்தேன்’ என்ற மாணிக்க வாசகரைப் போல் ஆண்டவணை பிடிக்கிறான். நம் நாட்டில் விளக்கைக் கண்டதும் தொழுவதேன்? போத நிலையில் விளங்குஞ் சோதியை நினைப்பூட்டும் அறிகுறியே அது. ஏன்: குத்து விளக்கு எதைக் குறிக்கிறது? இந்த அரிய நுட்பத்தை விளக்குவதே குத்து விளக்கு.

இது புறச் சின்னம். முதல் முதல் சோதி தரிசனம் நிகழும் இடம் புருவமத்தி என்று யோக நூல்கள் கூறும். அவ்விடத்தைக் குறிக்கவே நம் நாட்டார் சந்தனம் முதலிய வற்றால் பொட்டிடுதலுண்டு.** இராமலிங்க அடிகளார் இதைச் சுட்டிக்காட்டி சில பாக்களும் பாடியுள்ளார்.

வேதம் என்பது அறிவு. இது விளங்குமிடமே வேதாந்தம். இந்நிலையே வேத நிலையென்பது. வேதத்தின் அந்தத்தில் எல்லாம் அறிவு மயமாய் விளங்கும். ஓரிடத்தில் திரண்டு காட்சியளித்த சிவசோதி எல்லா இடங்களிலிலும் பரவு கிறது. இது ஒரு பெருநிலை.

இப்பெரு நிலையை அடைந்த ஒருவன் அடுத்த மிகப் பெரிய நிலையை அடைவான். அது தான் சித்தாந்தம். எங்கும் நீக்கமற நிறைந்து ஒளிரும் அருட் பெருஞ் சோதியைத் தான் அஃது என்னும் இரண்டற உணரும் ஒரு நிலையே சித்தாந்தமென்பது.

இவ்வாறந்தங்களில் நிகழும் ஒவ்வோர் அனுபவத்தையும் ஒவ்வொரு முகமாக ஞானிகள் கூறுவது வழக்கம். இக்

  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக். 21. பக். 23-24.
? a jo 3

81