பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் இராமலிங்க சுவாமிகள் காலத்தில் என்ன வாகியது? சிதம்பரம் ஒரு சிலர் உரிமைக் கோயிலாயிற்று. சாதிப் பேய் புகுந்தது. சாதியே கடவுள்; சமயமே கடவுள் என்ற கொக்கரிப்பினுாடே, உண்மையிலேயே வழிபாடு நடத்துகிறவனுக்கு இடமே இல்லாது ப்ோயிற்று.

இக்கொடுமையை ஒழிக்கவே பிறந்தது சமரச சன் மார்க்கம். உண்மையான செம்பொருட்கு தோற்றமில்லை: ஒடுக்கமில்லை; மாறுதலும் இல்லை. இந்த ‘சத்’ என்பதை அறிய மார்க்கம்’ அல்லது வழியாக அமைந்ததே இயற்கை. இறையும் இயற்கையும் ஒன்றே. இவ்வுண்மையை உணர்ந் தவன் சன்மார்க்கம் என்றால் எது என்பதை உணர்வான். சன்மார்க்கம் பற்றிய உண்மைகளை அவன் அறிவான். அடிகளின் அன்பு சமயத்தை, சீவகாருண்யத்தை உயிரி ஒம்பலை உணர்வான்; செயல்வழி நிற்பான்.

அடிகள் எப்படி விளக்குகிறார் பார்ப்போம்? அடிகள் விளக்கவில்லை. இறையை வேண்டுகிறார்; இறைஞ்சிக் கேட்கிறார்; கெஞ்சுகிறார்; மன்றாடுகிறார்; எதற்கு?

எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி, எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ் விடத்தும், எவ்விதத்திலும், எள்ளளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்!!*

  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக். 39.

83