பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மையில் ஒருமை காண என்று ஒருவன் அறி கிறானோ, அன்றே அவன் சன்மார்க்கன் ஆவான்.

தெள்ளிய அறிவை அடிகோலுவது சன்மார்க்கம். மக்களுக்கு சகிப்புத் தன்மையை ஊட்டுவதும் சன் மார்க்கமே. காழ்ப்பு, வெறுப்புக்களை ஒடுக்கி, சீரிய எண்ணம், நல்ல பழக்க வழக்கங்களை நல்கவும் சன் மார்க்கமே தேவை என்றார் திரு. வி. க. ‘ஆமுைம் அமுதமும்’ என்ற மற்றொரு நூலில்.

  • உலகின் ஒரு பக்கத்தில் ஆலம்: இன்னொரு பக்கம் அமுதம். ஆலம் ஒடுங்குதல் வேண்டும்; அமுதம் எழுதல் வேண்டும். எளிதில் அஃது எழுமா? இரண்டையும் நிகழ்த்தும் ஒன்று உள்ளதா? உள்ளது. அதுவே சமயம் என்பது.”*

ஆலம் எது?

ஆலம் என்ன என்று விளக்குகிறார் தமிழ்த் தென்றல்.

மனிதன் இயற்கை விட்டு விலகிச் செய்யும் பாவக் குவியல்கள். இது யுத்தமாக உருவெடுக்கிறது. வாளுக்கு வாள்

‘யுத்த ஆலத்தை ஒடுக்கத் துப்பாக்கிக்கு துப்பாக்கியும், பீரங்கிக்கு பீரங்கியும், குண்டுக்குக் குண்டும் விடப்படு கின்றன.”*

இவ்விடுகை ஆலத்தைப் பெருக்கும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பைபிளில் மத்தேயுவின் புதிய அதிகாரத்தில் 26-51 முதல் 53-பகுதியும் சான்று.

ஆலத்தை ஒடுக்க சமரச சன்மார்க்கம்.

இந்த ஆலத்தை ஒடுக்குவது எங்ஙனம்?

  • ஆலமும் அமுதமும்’, பக். 13. * ஆலமும் அமுதமும், பக். 15.

A 440–6