பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

அழைத்து என்னைத் தன்னந்தனியனுக்கிய ஆண்டவன் தமையன் வழிப்போந்து எனக்குப் பல வழியினும் ஆறுதல ளித்து வந்த ஒரு மைந்தனையும் இப்பொழுது அழைத்துக் கொண்டான். எச் செல்வமும் பெருத எளியேனுக்குக் தமையன் வழிக்கிடைத்த சேய்ச் செல்வமும் போயிற்று.’

இறந்த அந்த பாலசுப்பிரமணியனே மீண்டும் பிறந்து வந்து, சுப்பிரமணியன் எனும் அப்பெயரே தாங்கி நவ சக்தி'யை நடாத்த வந்து விட்டான் என்று எண்ணிய து அவரது திருவுள்ளம். எனவே என்னைக் கண்ணுறும் போதெலாம் மகிழ்ச்சி பொங்கினர்.

தொடக்கத்தில் அவரை நான் நன்கு அறிந்தேன் அல்லன். அவர் தம் உள்ளக் கருத்தை உணர்ந்தேன் அல்லன். அவரிடம் நான் சீறிய நாட்கள் பல. வெகுண்ட நாட் களும் பல. ஆனல் அவர் என் மீது சீறினர் அல்லர் . வெகுண்டார் அல்லர். அவரோ அமைதியாகவே இருப்பார்; அன்புரையே பகிர்வார்.

ஒரு முறை நான் நவசக்தி ஊழியத்தினின்றும் விலகி விட முடிவு செய்தேன். அதற்குக் காரணம் எனது சீற்றமே. எனது முடிவைத் திரு.வி.க.வுக்குத் தெரிவித்தேன். எப்படித் தெரிவித்தேன்? ஒரு கடிதத்தின் மூலம் தெரிவித்தேன்.

கிடிதங் கண்டார் அவர்; மாடியினின்றும் இறங்கி வந்தார். என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். என்னை நோக்கினர்.

“உனது கடிதங் கண்டேன். நீ எங்கு செல்ல விரும்பு கிறாய்? நவசக்தி'யில் நீ ஊழியனுக இருப்பதாக எண்ணுதே தான் நவசக்தி உரிமையாளன் என்றும் எண்ணுதே. நவ சக்தி உன்னுடையது. நீயே அதை நடத்துபவன் என்று நினை’ என்றார்.

அவரது முகத்தில் அமைதி நிலவியது. அவரது குரலில் தந்தையன்பு தொனித்தது. அவரது கண்கள் எனது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. அன்பால் என்னை ஆட் கொண்டார் ஆவர். அன்பால் என்னைப் பிணைத்தார் அவர்